
Vijayakanth Narasimha Shock Scene Shared by Actor Venu Arvind : இயக்குநர் திருப்பதிசாமி இயக்கத்தில் விஜயகாந்த், இஷா கோப்பிகர், ரகுவரன், நாசர், ரஞ்சித், ஆனந்தராஜ், சந்திரசேகர், வடிவேலு, தலைவாசல் விஜய், வேனு அரவிந்த் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் நரசிம்மா. விஜயகாந்த் தனது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இந்த படத்தை தயாரித்திருந்தார். மணி சர்மா தான் படத்திற்கு இசை.
பயங்கரவாத கும்பலின் தலைவர் இறந்த பிறகு புதிய தலைவரான ரசூல் அக்தர் இந்தியாவை அழிக்க விரும்பி 20 இந்திய வீரர்களை கடத்திச் சென்று அவர்களை கொலை செய்து விடுகிறார். இதற்கிடையில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலக கட்டிடத்திற்கு வெடிகுண்டு வைத்த விஜயகாந்த் (கேப்டன் நரசிம்மா) அங்கிருந்து தப்பிக்கும் போது பாதுகாப்பு அமைச்சர் ராணா (ரகுவரன்) மற்றும் மற்ற அதிகாரிகளால் விஜயகாந்த் கைது செய்யப்படுகிறார்.
போலீஸ் விசாரணையில் விஜயகாந்திடமிருந்து உண்மையை வரவழைக்க பல விதமான டிரீட்மெண்ட் செய்கிறார்கள். ஆனால், எதற்கும் விஜயகாந்த் அஞ்சவில்லை. அதில் ஒன்று தான் ஷாக் டிரீட்மெண்ட். இதையடுத்து அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற விஜயகாந்த் ஒவ்வொரு டானையும் கொலை செய்கிறார். கடைசியில் விஜயகாந்தை பற்றி தெரியவருகிறது. அவர், யார், எதற்காக டான்களை எல்லாம் கொலை செய்தார் என்பது பற்றிய படம் தான் நரசிம்மா.
இந்த நிலையில் தான் இந்தப் படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கடந்த நிலையில் நடிகர் வேணு அரவிந்த் இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தது பற்றியும், அவருக்கு கொடுக்கப்பட்ட ஷாக் டிரீட்மெண்ட் பற்றியும் விளக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. அப்போது தான் எனக்கு ஏவிஎம் தயாரிப்பில் வாழ்க்கை என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிப்பதை பார்த்த இயக்குநர் திருப்பதிசாமியின் சகோதரி என்னை அழைத்து அவரது அண்ணனிடம் சொல்லி, விஜயகாந்த் படத்தில் நடிக்க வைத்தார். அப்படி நடித்த படம் தான் நரசிம்மா.
அந்த படத்தில் நான் கேப்டன் விஜயகாந்திற்கு ஷாக் கொடுப்பது போன்று ஒரு சீன். அதில் நெருப்பு பொரி அவர் மீது தெரிப்பது போன்று ஒரு காட்சி. அந்த காட்சியில் நான் விஜயகாந்த் அணிந்திருக்கும் ஹெல்மேட் மீது வைக்க வேண்டும். நான் புது நடிகர். அதோடு ஸ்டண்டும் தெரியாது. ஆனால், கேப்டன் விஜயகாந்துக்கு இது புதுசு அல்ல. எல்லா ஸ்டண்ட்ச் காட்சிகளிலும் நடித்துவிட்டார். இருந்தாலும் என்னைப் பார்த்து, புது பையன் என்பதால் கொஞ்சம் பயந்து விட்டார்.
அதன் பிறகு அவரே இந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். கிராஸ் லெக் புட் நடங்க என்றார். அந்த ஒரு சீன் மட்டுமே 4 டேக் எடுக்கப்பட்டது. ஏனென்றால் நான் நடக்கும் போது என்னுடன் கேமரா மேனும் வர வேண்டும். 2ஆவது டேக்கில் நான் நெருப்பை எடுத்துக் கொண்டு அவருக்கு அருகிலேயே சென்றுவிட்டேன். எனினும் அது கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துவிட்டது என்று கூறியுள்ளார். கடைசியாக விஜயகாந்தின் கண்ணுக்கு ஒரு பவர் இருக்கும். இதை அவரிடம் நான் சொன்னேன். அவரும் சிரிச்சுக்கிடே சென்றுவிட்டார். விஜயகாந்தை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஐ மிஸ் யூ கேப்டன் என்று பகிர்ந்துள்ளார்.
நடிகர் வேணு அரவிந்த், சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நிலாபெண் என்ற தொடரிலும், சிவமயம், காஸ்ட்லி மாப்பிள்ளை, கிரீன் சிக்னல், காதல் பகடை, அலைகள், ஆடுகிறான் கண்ணன், வாணி ராணி, சந்திரகுமாரி என்று பல தொடர்களில் நடித்துள்ளார். இப்போது ராதிகா நடித்து வரும் தாயம்மா குடும்பத்தாரில் நடித்து வருகிறார். இதே போன்று, முத்து எங்கள் சொத்து, அந்த ஒரு நிமிடம், பகல் நிலவு, படிக்காத பண்ணையார், நரசிம்மா, வல்லவன், சபாஷ் சரியான போட்டி, ஓ மணப்பெண்ணே ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.