ரஜினிகாந்த், அஜித் வரிசையில் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்திருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராக தொடங்கிய இவரது பயணம், பின்னர் தொகுப்பாளராக மாறி தன்னுடைய பேச்சுத்திறமையால் ரசிகர்களை ஈர்த்து, படிப்படியாக சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்று டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். சினிமாவில் சாதிக்க தூண்டும் பலருக்கும் இவர் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.
24
Sivakarthikeyan Interview
இன்று டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், சினிமாவில் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது : “தமிழ் சினிமா துறையில், ஒரு காமன் மேன் சாதிப்பதை சிலர் ஆதரிக்கிறார்கள். ஆனால் சிலருக்கு அது பிடிக்கவில்லை. யார் நீ.. உனக்கு ஏன் இதெல்லாம் கிடைக்குது என்று கேட்பவர்களும் இங்கு இருக்கிறார்கள்.
எனக்கு முகத்துக்கு நேராகவே அவர்கள் கேட்டிருக்கிறார்கள். நீ யாரு... இங்க என்ன பண்ற என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். நான் நிறைய முறை இதை எதிர்கொண்டிருக்கிறேன் என சிவகார்த்திகேயன் சொன்னதும், அப்போ நீங்க என்ன சொல்லுவீர்கள் என தொகுப்பாளர் கேட்டதற்கு, நான் எதுவும் செய்ய மாட்டேன், அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவேன். அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்களோ கேட்டுவிட்டு சென்றுவிடுவேன் என கூறி உள்ளார்.
44
sivakarthikeyan about Kollywood Mafia
தொடர்ந்து பேசிய அவர், நான் யாருக்கும் பதிலளித்ததில்லை. என்னுடைய வெற்றி தான் அவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடி என்றும் நான் சொல்லமாட்டேன். ஏனெனில் அதில் நான் உள்பட என்னுடைய குழுவினரின் உழைப்பு இருக்கிறது. என்னைப்பார்த்து சிலர் சினிமாவில் வரத் துடிக்கிறார்கள். அதனால் என்னுடைய வெற்றி அவர்களுக்கானது தான். அதேபோல சோசியல் மீடியாவில் ஒரு குரூப் இருக்கிறது. என்னுடைய படம் தோல்வி அடைந்தால் அவர்கள் என்னை சரமாரியாக தாக்கி பதிவிடுவார்கள். அதே நேரத்தில் என்னுடைய படம் வெற்றியடைந்தால், என்னைத் தவிர அதில் உள்ள மற்றவர்களை புகழ்ந்து பேசுவார்கள்” என சிவகார்த்திகேயன் பேசி உள்ளது வைரலாகி வருகிறது.