தனுஷுக்கு போட்டியாக பாலிவுட்டில் எண்ட்ரியாகும் சிவகார்த்திகேயன் - முதல் படமே இவருடனா?

First Published | Jan 7, 2025, 8:03 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் விரைவில் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

sivakarthikeyan

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆகவும் உயர்த்தி உள்ளது. ரஜினி, விஜய், கமலுக்கு அடுத்தபடியாக அதிக வசூல் அள்ளிய கோலிவுட் ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன் தான். அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Actor Sivakarthikeyan

அதில் அவரின் எஸ்.கே.23 திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் சல்மான் கானின் சிக்கந்தர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் எஸ்.கே.23 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டு உள்ளது. அவர் சிக்கந்தர் பட ஷூட்டிங்கை முடித்ததும் எஸ்.கே.23 படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளை படமாக்கி முடிக்க உள்ளார்களாம்.

Tap to resize

Sivakarthikeyan Upcoming Movies

இதுதவிர சிவகார்த்திகேயனின் எஸ்.கே.24 மற்றும் எஸ்.கே.25 ஆகிய இரண்டு திரைப்படங்களை சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இயக்கி வருகின்றனர். இதில் எஸ்.கே.25 பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... புறநானூறு இல்ல; சிவகார்த்திகேயனின் எஸ்.கே.25 படத்தின் டைட்டில் லீக் ஆனது!

Aamir Khan

இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன் தான் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி பாலிவுட் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக கூறிய சிவகார்த்திகேயன், அமீர்கான் தன்னை அழைத்து தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தான் உங்களை அறிமுகப்படுத்துவேன் என சொன்னதாகவும், அதற்கு ஓகே சொல்லி பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறி இருக்கிறார்.

Sivakarthikeyan Debut in Hindi

சில காரணங்களால் தற்போது இந்தி படத்தில் நடிக்க முடியவில்லை. ஆனால் விரைவில் இந்தியில் நிச்சயம் படம் பண்ணுவேன். அப்படத்தை அமீர்கான் தான் தயாரிப்பார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். முன்னதாக தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமாகி கலக்கி வரும் நிலையில், தற்போது அவருக்கு போட்டியாக சிவகார்த்திகேயனும் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க உள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... தளபதி ஸ்டைலில்; உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்!

Latest Videos

click me!