விலகியது 'விடாமுயற்சி'! பொங்கல் ரேஸில் இணைந்த 2 புதிய படங்கள்!

First Published | Jan 1, 2025, 1:46 PM IST

பொங்கல் பண்டிகையில் வெளியாகும் படங்களுடன் போட்டியிட இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
 

Pongal Release Movie

அஜித் நடித்து வந்த, 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து வெளியேறுவதாக நேற்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதி செய்த நிலையில், தற்போது இரண்டு புதிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 

Vidamuyarchi not Release in Pongal

பொதுவாகவே தீபாவளி, பொங்கல், நியூ இயர் போன்ற விசேஷ நாட்களை குறிவைத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால், வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களின் திரைப்படங்களை வெளியிட அஞ்சுவார்கள். காரணம் பெரிய நடிகர்களின் ரசிகர்கள் அலையில் சிக்கி, வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் கவனிக்கப்படாமல் போய்விடும் என்பதால்.

டீச்சரையே கரெக்ட் செய்த ஸ்டூடெண்ட்! ரொமான்டிக் புகைப்படத்தோடு காதலை அறிவித்த விஜய் டிவி பிரபலங்கள்!

Tap to resize

Game Changer, veera dheera sooran , Vanangaan

ஆனால் ஒரு சில படங்கள், இது போன்ற அலைகளைக் கடந்து ரசிகர்கள் மத்தியில் கவனிக்க கவனிக்கப்படுகிறது. பொங்கல் ரிலீஸ் ஆக விடாமுயற்சி வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியான பின்னர்,  இதற்கு போட்டியாக வணங்கான், வீர தீர சூரன், மற்றும் இயக்குனர் ஷங்கரின் பான் இந்தியா படமான 'கேம் சேஞ்சர்'. மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 

Vidamuyarchi Postponed

ஆனால் தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம், பொங்கல் ரிலீஸ் இருந்து வெளியேறுவதாகவும் தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லைக்கா நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.  இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்ததி இருந்தாலும், சில வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வழிவகுத்துள்ளது.

ஆரம்பித்த ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட் சீரியல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Ten Hours Released in Pongal 2025

 அதன்படி நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' என்கிற திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. இது 10 மணி நேரம் நடக்கும் ஒரு பரபரப்பான சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இதற்கு முன்பு சிபிராஜ் நடித்த திரைப்படங்களை விட மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சிபிராஜ் ஒரு பஸ் டிரைவராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக வர வெளியாகிறது.

Madraskaaran Release in Pongal

இதை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் ஷானி நிகம் ஹீரோவாக தமிழில் அறிமுகமாக உள்ள திரைப்படம் 'மெட்ராஸ்காரன்'. பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் நிஹாரிகா, கலையரசன், கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள நிலையில், ஜெகதீஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். தற்போது இந்த படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகா உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

நான் என்ன மனோரமா மாதிரியா? வடிவேலு பேச்சால் சண்டைக்கு போன சரோஜா தேவி - ரமேஷ் கண்ணா பகிர்ந்த தகவல்!

Latest Videos

click me!