என்னுடைய குருநாதர் பாலா, அமீர் முன்னாடி நான் கைய கட்டி நின்னு தான் பேசுவேன் – கஞ்சா கருப்பு ஓபன் டாக்!

First Published | Jan 1, 2025, 1:18 PM IST

Ganja Karuppu Talk About Director Bala and Ameer : எனக்கு வாழ்வு கொடுத்த பாலா மற்றும் அமீர் முன்பு நான் உட்கார்ந்ததே கிடையாது என்று காமெடி நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.

Ganja Karuppu Talk About Director Bala and Ameer

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அதிகளவில் பிரபலமானார். இவரது உடல் மொழியும் ஒரு சான்றாக அதற்கு அமைந்துவிட்டது. இயக்குநர் பாலா இயக்குநராக அவதாரம் எடுத்த படம் தான் பிதாமகன். இந்தப் படத்தில் கஞ்சா கருப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாலா நடிக்க வைத்தார். பிதாமகன் படம் ஹிட் கொடுக்கவே சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Director Bala Filmography, Ganja Karuppu Talk About Director Bala and Ameer

பிதாமகன் படத்தில் கஞ்சா தோட்டங்களில் வேலை பார்க்கும் கருப்பு ஒரு நடிகராக அறியப்பட்ட நிலையில் அதன் பிறகு கஞ்சா கருப்புவாக அடையாளம் காட்டப்பட்டார். ஆனால், இவருடைய உண்மையான பெயர் என்னவோ கருப்பு ராஜா. சினிமாவில் பிதாமகன் படம் அவரது அடையாளத்தை மாற்றி கொடுக்கவே கஞ்சா கருப்புவாக அறியப்படுகிறார்.

Tap to resize

Pithamagan, Suriya, Vikram, Thalapathy Vijay

பிதாமகன் படத்திற்கு ராம் படத்தில் நடித்தார். இந்தப் படமும் அவருக்கு சிறப்பான ஒரு அடையாளத்தை கொடுத்தது. இதையடுத்து சிவகாசி, சண்டகோழி, திருப்பதி, சிவப்பதிகாரம், கிழக்கு கடற்கரை சாலை, தாமிரபரணி, பருத்துவீரன், திருமகன், அறை எண் 305ல் கடவுள், நாடோடிகள், களவாணி, வேங்கை, தர்ம துரை, நிமிர், சண்டகோழி 2, களவாணி 2 என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆரம்பகாலங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் சமீப காலமாக அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற படங்கள் அமையவில்லை.

Director Bala, Ganja Karuppu

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 14ஆவது நாளில் வெளியில் வந்தார். இப்போது எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் என் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு, ஸ்ரீ சபரி அய்யப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய குருநாதர் முன்பு தான் ஒரு போதும் உட்கார மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பாலா அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலை செய்தேன். அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ள அனுமதியும் கொடுத்தாங்க. அப்போது தான் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்கள்.

Ganja Karuppu Filmography

சினிமாவில் வளர்ந்த பிறகு தன்னுடைய வளர்ச்சிக்கு யார் காரணம் என்று சொல்லு, அதுவரையில் உன்னுடைய தனது பெயரை உச்சரிக்க கூடாது என்று இயக்குநர் பாலா கூறியதாக குறிப்பிட்டார். எனக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர்கள் இருவர் தான். அவர்கள் தான் பாலா மற்றும் அமீர். இவர்கள் தான் என்னுடைய குருநாதர்கள். இன்று வரையில் எனக்கு வாய்ப்பு கொடுத்த பாலா மற்றும் அமீர் ஆகியோர் முன்பு நான் ஒரு போதும் உட்கார்ந்தது கிடையாது. கைய கட்டி நின்னு தான் அவர்கள் முன்பு நான் பேசுவேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற வணங்கான் பட புரோமோஷன் நிகழ்ச்சியின் போது விஜய் வரும் போது தான் ஏன் எழுந்து நிற்கவில்லை என்பதற்கா காரணம் குறித்து இயக்குநர் பாலா பேசியிருந்தார். விஜய் வரும் போது நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும். அது கவனக்குறைவாக நடைபெற்ற ஒரு நிகழ்வு. அதோடு விஜய் என்னை விட வயதில் சிறியவர். அவரை நான் அவமானப்படுத்துவதாக செய்யவில்லை. அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்று கூறியிருந்தார்.

Latest Videos

click me!