பாட்ஷா டயலாக்கை சொல்லி 2025 புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்: வைரலாகும் ரஜினி பதிவு!

First Published | Jan 1, 2025, 12:05 PM IST

Rajinikanth 2025 New Year Wish to Fans : 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தான் பேசிய டயலாக்கை பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டு ரஜினிகாந்தின் பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

Rajinikanth 2025 New Year Wish to Fans, Coolie Movie

Rajinikanth 2025 New Year Wish to Fans : ஹீரோவாக நடிப்பதற்கு முன் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தும் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் படத்தில் ஆரம்பித்து இன்று வேட்டையன் வரையில் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். இதில் ஏராளமான ஹிட் படங்களும், தோல்வி படங்களும் அடங்கும். ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த 2 படமுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

Rajinikanth 2025 New Year Wish to Fans

சினிமாவில் ஆரம்பகாலகட்டங்களில் வருடத்திற்கு 15க்கும் அதிகமான படங்களில் நடித்தார். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியானது. இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரூ.260 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.300 கோடி வரையில் வசூல் குவித்தது. இப்போது இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Tap to resize

Rajinikanth 2025 New Year Wish to Fans

கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகர்ஜூனா, சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, ரெபே மோனிகா ஜான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அமீர் கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. ஆனால், இன்னும் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் 2025 புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Rajinikanths Filmography

அதோடு தனது சமூக வலைதள பக்கத்தில் புத்தாண்டு பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். இது ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பாட்ஷா படத்தில் வரும் டயலாக்.

Baashha Movie

இந்த டயலாக்கை சொல்லி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண் ராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான பாட்ஷா படம் கடந்த 1995 ஆம் ஆண்டு திரைக்கு வந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று நடிகர் சிவகார்த்திகேயனும் தன் பங்கிற்கு 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் மகிழ்ச்சி, வளர்ச்சி, வெற்றிகள் நிறைந்த அற்புதமான புத்தாண்டு வாழ்த்துக்கள். 2025ஐ சிறப்பானதாக மாற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!