மணிகண்டன் நடிக்கும் படத்திற்கு இப்படியொரு தலைப்பா? அரசியலை விமர்சிக்கும் முயற்சியா?

Published : Jan 01, 2025, 10:58 AM IST

Manikandan Next Movie Titled as Makkal Thalaivan : மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

PREV
15
மணிகண்டன் நடிக்கும் படத்திற்கு இப்படியொரு தலைப்பா? அரசியலை விமர்சிக்கும் முயற்சியா?
Manikandan Next Movie Titled as Makkal Thalaivan

Manikandan Next Movie Titled as Makkal Thalaivan : திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் பீட்சா 2 படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசும் அளவிற்கு இல்லை. காலா, ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. குட் நைட் படத்திற்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. குரட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் கணவன் மனைவிக்கிடையில் எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டியது.

25
Manikandan next movie titled as Makkal Thalaivan produced by Pa Ranjith

இவ்வளவு ஏன் கடந்த ஆண்டு திரைக்கு வந்த விஜய்யின் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட விஜயகாந்திற்கு இவர் தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் குடும்பஸ்தன் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தான் பா ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் ஏ டி குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

35
Manikandan Filmography

அதன்படி பா ரஞ்சித் தயாரிப்பில் ஏ டி குமார் இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் புதிய படத்திற்கு மக்கள் தலைவன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவன் என்ற படத்தில் விஜய் நடித்திருந்தார். மக்கள் செல்வன் என்ற அடைமொழி விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது மக்கள் தலைவன் என்ற டைட்டில் மணிகண்டன் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது இப்போது விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

45
Manikandan as Makkal Thalaivan

இதற்கு காரணம் பெரிய பெரிய தலைவர்களை மக்கள் தலைவன் என்று அழைப்பதுண்டு. சமூக வலைதளங்களில் மக்கள் தலைவன் என்று தேடினால் மக்கள் தலைவன் மாவோ, மக்கள் தலைவன் அண்ணாமலை, மக்கள் தலைவன் எம்ஜிஆர் என்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டைட்டிலை பார்க்கும் போது அரசியல் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

55
Director Pa Ranjith Filmography

இந்தப் படம் குறித்து மற்ற தகவல் ஏதும் இல்லை என்றாலும் இந்த படம் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதே போன்று தான் பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கின்றனர். ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தங்கலான்.

சமீபத்தில் இந்தப் படம் குறித்து பேட்டியளித்த பா ரஞ்சித் இன்னமும் இந்த உலகத்திற்குள்ளேயே தான் இருப்பதாகவும், இன்னும் தங்கலான் உலகத்தை விட்டு வெளியில் வரவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா ரஞ்சித் கபாலி, காலா என்று ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories