நான் என்ன மனோரமா மாதிரியா? வடிவேலு பேச்சால் சண்டைக்கு போன சரோஜா தேவி - ரமேஷ் கண்ணா பகிர்ந்த தகவல்!

First Published | Jan 1, 2025, 10:07 AM IST

பிரபல நடிகரும் இயக்குனருமான - ரமேஷ் கண்ணா 'ஆதவன்' படத்தின் போது நடந்த மறக்க முடியாத சம்பவத்தை, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

Saroja devi and Vadivelu Issue

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சூர்யா - நயன்தாரா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆதவன்'. இந்த படத்தில் வடிவேலு காமெடியனாக நடிக்க, சரோஜாதேவி, ராகுல் தேவ், ஆனந்த் பாபு, சாயாஜி ஷிண்டே, முரளி, ரமேஷ் கண்ணா, சத்யன், மனோபாலா, ரியாஸ் கான், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிஜி மூலம் இந்த படத்தில், சூர்யாவின் உருவத்தை கொண்டே.. அவரின் சிறிய வயது தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தந்தது.

Saroja Devi Comeback Movie

இந்த படத்தில் சரோஜாதேவி, நயன்தாராவின் பாட்டியாக நடித்திருந்தார். பல வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த சரோஜா தேவிக்கு இந்த படம் சிறந்த கம்பேக் கொடுத்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற போதும், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கிய 'விடாமுயற்சி'! இரண்டும் இல்லாமல் ஏமார்ந்து போன ரசிகர்கள்!

Tap to resize

Aadhavan Movie Cast

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரமேஷ் கண்ணா தான், 'ஆதவன்' படத்திற்கு கதாசிரியராக பணியாற்றினார். அவர் வடிவேலுவுக்கு வேறு ஒரு டயலாக் எழுதி கொடுக்க, வடிவேலு அதை அப்படியே கொஞ்சம் மாற்றி பேசியது தான் சரோஜா தேவியின் கோவத்திற்கு காரணமாக  அமைந்தது. வடிவேலுவை பொருத்தவரை இயக்குனர் சொல்லிக் கொடுக்கும் வசனங்களை விட தனக்கு தோன்றும் சில வசனங்களை பேசி ரசிகர்கள் மனதில் ஸ்கோர் செய்து விடுவார். அப்படி அவர் பேசிய பல வசனங்கள் இன்று வரை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டெண்டாக மாறியுள்ளது.

Vadivelu Controversy Dialogue

அந்த வகையில் தான், ஆதவன் படத்தில் "நீ அப்படியே மேல போ... ஒரு அம்மா நிறைய பவுடர் போட்டுட்டு படுத்து இருக்கும்". என்று ஒரு டயலாக்கை ரமேஷ் கண்ணா எழுதிக் கொடுக்காமலேயே பேசி உள்ளார் வடிவேலு. இந்த டயலாக்கால் கடுப்பான சரோஜாதேவி, ஸ்டோரி ரைட்டர்ரான ரமேஷ் கண்ணாவுக்கு போன் போட்டு. நான் உங்ககிட்ட நடிக்க சான்ஸ் கேட்டேனா? நீங்க தான என்ன கூப்பிட்டீங்க, என்னை நடிக்க வச்சுட்டு இப்படி எல்லாம் டயலாக் பேச வைக்கிறீங்க என்று கோபத்தோடு கேட்டுள்ளார்.

2024-ல் நயன்தாராவின் மோதல் முதல் அல்லு அர்ஜுன் கைது வரை; திரையுலகை அதிர வைத்த 7 சர்ச்சைகள்!

Saroja Devi Angry

அதுக்கு ரமேஷ் கண்ணா, அந்த ஆளு லூசு மாதிரி பேசிட்டாமா கொச்சிக்காதீங்க.  அது ஒன்னும் தப்பில்லை என்று கேட்டுள்ளார். அதுக்கு சரோஜா தேவி, நான் என்ன மனோரமா மாதிரி காமெடி ஆர்டிஸ்டா? நான் ஒரு ஹீரோயின் என்றெல்லாம் பேசியதாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்த பிரச்சனை எப்படியோ சமாதானம் ஆனதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Aadhavan Movie Vadivelu Comedy

தற்போது 86வயதை எட்டியுள்ள, சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக திரையுலகில் இருந்து விலகி இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் கன்னட பைங்கிளி என பெயர் எடுத்தவர். கன்னட மொழியில் 1955-ஆம் ஆண்டு அறிமுகமான சரோஜா தேவி, 1956-ல் வெளியான திருமணம் படத்தின் மூலம் தான் தமிழில் ஹீரோயினாக நடித்தார். எம்ஜிஆருக்கு ஜோடியாக இவர் நடித்த நாடோடி மன்னன் திரைப்படம் தமிழ் திரையுலகில் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டை நடிகரின் குடும்பத்தோடு கொண்டாட வெளிநாடு பறந்த நயன் - விக்கி! வைரலாகும் புகைப்படம்!

Latest Videos

click me!