டீச்சரையே கரெக்ட் செய்த ஸ்டூடெண்ட்! ரொமான்டிக் புகைப்படத்தோடு காதலை அறிவித்த விஜய் டிவி பிரபலங்கள்!

First Published | Jan 1, 2025, 12:51 PM IST

விஜய் டிவியில், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து பிரபலமான சங்கீதா சாய் மற்றும் 'அய்யனார் துணை' சீரியலில் நடிக்கும் அரவிந்த் சேஜு இருவரும் காதலிப்பதாக அறிவித்துள்ளனர்.
 

VJ Sangeetha Sai

சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களின் காதல் விஷயத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நியூ இயர் தினத்தில், காதலை அறிவித்துள்ளனர் விஜய் டிவி சீரியல் பிரபலங்கள்.

Serial Actress Real Pair

விஜே-வாக  இருந்து சீரியல் நடிகையாக மாறியவர் தான் சங்கீதா சாய். மதுரையை சேர்ந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாம், மதுரையில் தான். தன்னுடைய கிராஜுவேஷனை முடித்த கையேடு சென்னையில் உள்ள ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலைக்கு வந்து சேர்ந்தார்.

Tap to resize

Sangeetha Sai Love Aravind Seju

சுமார் 5 வருடங்கள் ஐடி துறையில் பணியாற்றி கொண்டிருந்த இவர், தன்னுடைய தோழி ஒருவர் சன் மியூஸிக்கில் விஜே-வாக இருப்பதை பார்த்து ஆசைப்பட்டு, விஜே ஆடிஷனில் கலந்து கொண்டார்.

ஆரம்பித்த ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட் சீரியல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Sangeetha Sai Life Story

அணைத்து சுற்றிலும் பர்ஃபாம்மென்சில் பின்னிய சங்கீதா சாய் விஜே-வாக தேர்வானார். சுமார் 3 மாதம் வரை விஜே-வாக பணியாற்றி கொண்டே, ஐடி வேலையும் செய்து வந்த சங்கீதா, பின்னர் ஐடி வேலையை உதறிவிட்டு முழு நேர விஜே-வாக ஆனார்.

Sangeetha Get Serial Chance

இதன் பின்னர், சில சீரியல் வாய்ப்புகளை தேட துவங்கிய இவருக்கு, சன் டிவியில் ஒளிபரப்பான அழகி சீரியலில் பூர்ணா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் பாசிட்டிவாக இவரின் கதாபாத்திரம் காட்ட பட்டாலும், பின்னர் நெகட்டிவ் ஷேடுக்கு மாறியது.

Sun TV Azhagi Serial

இந்த சீரியலில் நடிக்கும் போது, காதல், எமோஷன் போன்ற காட்சிகளில் நடிக்க இவர் சிரமப்பட்ட நிலையில் அந்த சீரியலில் நடித்த ரேவதி முதல் ஸ்ருதி ராஜ் வரை கொடுத்த ஊக்கம் தான் இப்போது இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த காரணம் என அவரே கூறியுள்ளார்.

நான் என்ன மனோரமா மாதிரியா? வடிவேலு பேச்சால் சண்டைக்கு போன சரோஜா தேவி - ரமேஷ் கண்ணா பகிர்ந்த தகவல்!

Vijay tv Thamizhum Saraswathiyum

கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த விஜய் டிவி தொடரான தமிழும் சரஸ்வதியும் தொடரில் சங்கீதா சாய் நடித்திருந்தார். 30 வயதை கடந்த பின்னரும், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர், தற்போது தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

KKK season 2

சங்கீதா சாய், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த 'கனகாணும் காலங்கள் சீசன் 2' தொடரில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாய் பல்லவிக்கு பின்னர் இந்த மலர் டீசர் அதிகப்படியான இளசுகளை கவர்ந்தார்.

தங்க மோதிரத்தோடு எனக்கு மாமியாரா வருவீங்களா என்று புரபோஸ் பண்ணிட்டாரு: ரம்யா பாண்டியனின் அம்மா ஜாலி பேச்சு!

Sangeetha Acting Malar Teacher Role

இந்த தொடரில் ஸ்டுடென்ட்டாக நடித்த அரவிந்த் சேஜு என்பவரை தான், சங்கீதா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இவர்களின் ரொமான்டிக் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Blacksheep Aravind Seju

அரவிந்த் சேஜு , பிளாக் ஷீப் யூ டியூப் தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இதன் மூலமாகவே இவருக்கு, KKK சீசன் 2 வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Confirmed Love

அதே போல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள அய்யனார் துணை சீரியலிலும் சோழன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.. புத்தாண்டை முன்னிட்டு, சங்கீதா சாய் - அரவிந்த் சேஜு தங்களின் காதலை உறுதி செய்துள்ள நிலையில், தை மாதமே திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கிய 'விடாமுயற்சி'! இரண்டும் இல்லாமல் ஏமார்ந்து போன ரசிகர்கள்!

Latest Videos

click me!