ரஜினியின் 1000 கோடி கனவில் மண்ணை அள்ளிப் போட வரும் பான் இந்தியா படம்; கூலி அப்போ காலியா?

Published : Apr 06, 2025, 09:34 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

PREV
14
ரஜினியின் 1000 கோடி கனவில் மண்ணை அள்ளிப் போட வரும் பான் இந்தியா படம்; கூலி அப்போ காலியா?
Coolie Movie 1000 Crore Collection Doubtful

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி (Coolie) படத்தின் வெளியீட்டு தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தேவா வரார் என்ற கேப்ஷனுடன் கூலி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்து இருந்தது. அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் விசில் அடித்தபடி இருக்கும் மோனோக்ரோம் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. 

24
Coolie

1000 கோடி கனவில் இருக்கும் கூலி

லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் கூலி. இது தங்கக் கடத்தல் பின்னணியில் உருவாகி உள்ள ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. கூலியில் உபேந்திரா, அக்கினேனி நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கோலிவுட்டின் 1000 கோடி வசூல் கனவை நனவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... Coolie Release Date: சவுண்ட ஏத்து! தேவா வர்ராரு; 'கூலி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

34
Rajinikanth, Lokesh Kanagaraj

கூலிக்கு ஆப்பு வைக்க போவது யார்?

ஆனால் கூலி படம் 1000 கோடி வசூலிப்பது கேள்விக் குறியாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் வார் 2 (War 2) திரைப்படம் தான். ஏனெனில் கூலி படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் வார் 2 படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் தொடங்கிவிட்டது. 2023ல் டங்கி சலார் மோதல் போல் இது இருக்குமா என்ற கேள்வி முக்கியமாக எழுப்பப்படுகிறது. 

44
Rajinikanth Coolie vs Hrithik Roshan Jr NTR War 2

கூலி உடன் மோதும் வார் 2

கூலி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது. அதேபோல் வார் 2 படத்தின் ஒரு பாடல் காட்சி இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. ஹிரித்திக் ரோஷனுக்கு காயம் ஏற்பட்டதால் அது தாமதம் ஆகி வருகிறது. அதே நேரத்தில் வார் 2, பாலிவுட்டில் நடிகர் ஜூனியர் என்டிஆரின் அறிமுக படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இரண்டு பெரிய படங்கள் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளதால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதையும் படியுங்கள்... ஜன நாயகன் விஜய் முதல் கூலி ரஜினி வரை; அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள் லிஸ்ட் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories