
அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதையொட்டி குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்பட்டது.
குட் பேட் அக்லியில் இளையராஜா பாட்டு
அஜித்தின் பல படங்களின் ரெபரன்ஸ் அடங்கிய அந்த டிரெய்லர், அஜித் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி அந்த டிரெய்லரில் இரண்டு விண்டேஜ் பாடல்கள் இடம்பெற்று இருந்தன. அந்த பாடல்களுக்கும் தற்போது ரசிகர்கள் வைப் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அந்த பாடல்களைப் பற்றியும், அது உருவான விதம் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குட் பேட் அக்லி டிரைலரில் இடம்பெறும் 2 விண்டேஜ் பாடல்களில் ஒன்று இளையராஜா பாட்டு. அது அவர் 1996-ல் இசையமைத்த நாட்டுப்புற பாட்டு என்கிற படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூவா தாரேன் பாடல். இந்தப் பாடலை இளையராஜாவின் ஆஸ்தான ப்ளூட்டிஸ்டான அருண்மொழியும், தேவி என்பவரும் இணைந்து இந்தப் பாடலை பாடி இருந்தார்கள். இந்த படத்தை இயக்கிய நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தான் இந்தப் பாடலுக்கு கிராமத்து மனம்கமள பாடல் வரிகளை எழுதி இருந்தார்.
ஒத்த ரூவா தாரேன் பாடல் உருவான விதம்
குறிப்பாக இந்தப் பாடலில் ‘பதிக்கஞ்சங்கிலி’ என அந்தக் காலத்து கிராமத்தில் புழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தையை கஸ்தூரி ராஜா பயன்படுத்தி இருப்பார். அந்த காலத்து பெண்கள் டாலர் வைத்த மாதிரி செயின்களை விரும்பி அணிவார்கள், அதன் பெயர் தான் பதிக்கஞ்சங்கிலி. அதேபோல் இந்த பாடலில் ஒணப்பந்தட்டு என்கிற வார்த்தையையும் பயன்படுத்தி இருப்பார் கஸ்தூரி ராஜா. அப்படியென்றால், அந்த காலத்தில் பெண்கள் காதுக்கு அணியும் ஒரு ஆபரணம் ஆகும். இந்தப் பாடலில் பெரிதாக இசைக் கருவிகள் எல்லாம் பயன்படுத்தி இருக்க மாட்டார் இளையராஜா. ஒரு தவில், ஒரு நாதஸ்வரம், ஒரு ஜிங்சக் மட்டுமே பயன்படுத்தி இந்த பாடலை கம்போஸ் செய்திருப்பார்.
இதையும் படியுங்கள்... இளையராஜா லேடி வாய்ஸில் பாடி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான பாடல் பற்றி தெரியுமா?
36 மணிநேரம் ஆடிய குஷ்பு
ஆனால் அது உருவாக்கிய வைப் வேறலெவலில் இருக்கும். இந்தப் பாடலிற்கு நடனம் அமைத்த ஜான்பாபு மாஸ்டரும், நடிகை குஷ்புவும் இணைந்து தான் இந்த பாடலுக்கு நடனமாடி இருப்பார்கள். இந்தப் பாடல் நான் ஸ்டாப் ஆக 36 மணிநேரம், இரவு பகலாக படமாக்கப்பட்டதாம். இப்போ இருக்கிற எந்த ஹீரோயினாவது இவ்வளவு ஈடுபாடோடு நான் ஸ்டாப் ஆக நடித்திருப்பாரா? என்று கேட்டால் அதற்கு விடை கிடைக்காது. ஆனால் அப்போது நடிகை குஷ்பு அதை செய்து அசத்தி இருந்தார். அதனால் தான் அந்தப் பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறது.
குட் பேட் அக்லியில் டார்கி நாகராஜா பாட்டு
குட் பேட் அக்லி டிரெய்லரில் இரண்டாவதாக பயன்படுத்தப்பட்டது சினிமா பாடலே கிடையாது. 90களில் வேற மாரி சம்பவம் செய்த ஒரு சுயாதீன இசைப் பாடல் அது. கிட்டத்தட்ட 23 வருஷத்துக்கு முன், மலேசியன் தமிழர் டார்கி நாகராஜா கம்போஸ் செய்த பாடல் தான் அது. இந்த பாடல் வெளியான போது மலேசியா, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கலக்கியது. மைக்கெல் ஜாக்சனே வந்து ஒரு தமிழ் ராப் பாடல் பாடினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு வைபை இந்த பாடலில் கொடுத்திருப்பார் டார்கி நாகராஜா.
மேலும் ஒரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், குட் பேட் அக்லியில், டார்கி நாகராஜாவின் சிக்னேச்சர் சவுண்டோடு அவர் ஒரு கேமியோவிலும் நடித்துள்ளார். இந்த டார்கி நாகராஜா இதற்கு முன்னர் ரஜினியின், கபாலி படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். 90களில் வெறித்தனமாக டிரெண்டான இந்த இரண்டு பாடல்களும் அடுத்து வரும் சில மாதங்களுக்கு அதற்குமேல் குட் பேட் அக்லி படம் மூலம் டிரெண்டாகப் போகிறது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் 'குட் பேட் அக்லீ' டிரைலர் எதிர்கொள்ளும் நெகட்டிவ் விமர்சனங்கள்; ஏன்?