பள்ளி மாணவனை துடப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் - கொந்தளித்து அறந்தாங்கி நிஷா!

விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா, பள்ளி மாணவன் ஒருவன் முட்டை கேட்டதற்காக அவனை துடைப்பத்தால் தாக்கிய சத்துணவு பணியாளரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில், நல்ல வரவேற்பை பெற்ற, 'கலக்கப்போவது யாரு' என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. பட்டிமன்ற பேச்சாளரான இவரது காமெடி சென்ஸ் பலராலும் பாராட்டப்பட்டதை தொடர்ந்து, விஜய் டிவி ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வானார். பின்னர் தன்னுடைய திறமையால், ஃபைனல் வரை வந்தாலும் டைட்டி வெல்லமுடியாமல் போனது. இதை தொடர்ந்து இவருக்கு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
 

Vijay tv Anchor Nisha:

சின்னத்திரையில் காலூன்றி உள்ள நிஷா:

அந்த வகையில், தனுஷின் மாரி 2, கலகலப்பு, உள்ளிட்ட சில படங்களில் நடித்துளளார். தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அழகு என்பதை என்பதை தாண்டி தன்னுடைய திறமையால் சின்னத்திரையில் காலூன்றி உள்ள நிஷா, தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்வதை வழக்கமாக வைத்துளளார்.

முஸ்லிம்கு வீடு தரமாட்டேன்னாங்க; சொந்த வீடு வாங்கி கெத்துகாட்டிய அறந்தாங்கி நிஷா!
 


Nisha Help

நியாயத்துக்கு குரல் கொடுத்து வருகிறார்:

சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், கொரோனா பேரிடர் போன்ற இக்கட்டான நிலையில் மக்களை தேடி சென்று உதவியுள்ள நிஷா, சமூகத்தில் நடக்கும் அநியாயத்துக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.அதில்  ஒரு அரசு பள்ளியில் சத்துணவு முட்டை கேட்டதற்காக 5ம் வகுப்பு மாணவனை சத்துணவு பணியாளர் துடப்பத்தால் விரட்டி விரட்டி அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

Nisha Instagram Post:

உரிய தண்டனை வழங்க வேண்டும்:

இதை பார்த்துவிட்டு மிகவும் ஆவேசமாக தன்னுடைய கருத்தை அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அறந்தாங்கி நிஷா கூறியுள்ளதாவது, "ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, சத்துணவு முட்டை கேட்டதற்கு 5 ம் வகுப்பு மாணவன் சமையல் செய்பவர்காலால் தக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது, ஆசிரியர்கள் அடிப்பது மாணவன் நல்வழிக்காக, இவர்கள் எப்படி மாணவன் மீது கைவைக்க முடியும், யார் கொடுத்த உரிமை, மரியாதைக்குரிய பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள் பணி நீக்கம் மட்டும் அல்ல உரிய தண்டனை வழங்க வேண்டும். என கோரிக்கை வைத்துள்ளார்.

Aranthangi Nisha : மகளின் க்யூட் போட்டோஸ் உடன் குட்நியூஸ் சொன்ன அறந்தாங்கி நிஷா.. குவியும் வாழ்த்து..

Netizens Comments:

நிஷா பதிவுக்கு குவியும் ஆதரவு:

அறந்தாங்கி நிஷாவின் இந்த பதிவை பார்த்த பின்னர், பலர் அவருக்கு ஆதரவாகவும், மாணவனை தாக்கிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!