வருகிற மே 29-ந் தேதி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ள நடிகைகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடிகைகள் பூஜா ஹெக்டே, ஹன்சிகா, தமன்னா, ராய் லட்சுமி, ஊர்வசி ரவ்துலா, யாஷிகா ஆனந்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய 10 பேர் கலந்துகொள்ள உள்ளார்களாம்.
லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்துள்ளது. அந்த நடிகைகள் அனைவரும் லெஜண்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச்சில் கவர்ச்சி நடனமும் ஆட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்... சித்ரா மாதிரியே அவளுக்கும் நடந்திருமோனு பயமா இருக்கு... பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி