கீர்த்தி சுரேஷை கொலைகாரி ஆக்கிய இயக்குனருடன் இணையும் பிரியங்கா மோகன்... அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?

First Published | May 27, 2022, 10:59 AM IST

Priyanka mohan : டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் என ஹாட்ரிக் ஹிட் படங்களில் நடித்த பிரியங்கா மோகன் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் வெளியாகி கடந்தாண்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆன டாக்டர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து பாண்டிராஜ் இயக்கிய எதற்கு துணிந்தவன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படமும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது.

இதன்பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன், அவருடன் டான் படத்தில் நடித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்ததன் காரணமாக முன்னணி நடிகையாக உயர்ந்தார் பிரியங்கா மோகன்.

Tap to resize

நடிகை பிரியங்கா மோகனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதன்படி தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள பிரியங்கா மோகன், நெல்சன் - ரஜினி கூட்டணியில் தயாராக உள்ள தலைவர் 169 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்க உள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...  அஷ்வினின் ஆணவப் பேச்சால் வந்த வினை... டிஆர்பி-யில் மரண அடி வாங்கிய ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படம்

Latest Videos

click me!