பருவமழை மற்றும் பண்டிகை காலங்களில் ஏற்படும் காய்கறி விலை உயர்வை சமாளிப்பதற்கான மாற்று வழிகளை இந்த கட்டுரை விவரிக்கிறது. வத்தல் குழம்பு, துவையல் வகைகள் போன்ற மாற்று உணவுகள், வீட்டுத் தோட்டம் அமைத்தல், நேரடி கொள்முதல் மூலம் செலவைக் கட்டுப்படுத்தலாம்.
பருவமழை, கார்த்திகை மாதம், சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் காய்கறிகள் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தக்காளி கிலோ ரூ.100, வெங்காயம் ரூ.50 என சாதாரண மக்கள் தினசரி வாங்கிப் பயன்படுத்தும் முக்கிய காய்கறிகளே கையில் எட்டாத விலைக்கு சென்றுள்ளன. அதோடு, பீன்ஸ், முருங்கைக்காய், குடைமிளகாய், காரட் போன்ற பல பொருட்களும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன. காய்கறிகள் விலை உயர்வு, மாத பட்ஜெட்டில் பெரிய துண்டு விழச்செய்யும் நிலையில், அதனை சமாளிக்க சில பொருளாதார டிப்ஸ் உங்களுக்கு கைகொடுக்கும். நடுத்த மற்றும் அடித்தட்டு மக்களுக்கு கைகொடுக்கும் அந்த மாற்று வழிகளை இப்போது பார்ப்போம்.
29
மாற்று உணவுகள் – சுவை குறையாது, செலவு குறையும்!
சாதாரணமாக இருக்கும் உணவுகளைப் பயன்படுத்தி, செலவைக் குறைக்காலாம். புளிசாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை உங்கள் செலவை குறைக்கும். இவைகளுக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாயே போதும். கூட்டு, பொரியல், வருவல் தேவையில்லை. குழந்தைகளும் அதிகமாக சாப்பிடும். சாப்பாடும் வீணாகாது.
39
மண மணக்கும் வந்த குழம்பு கைகொடுக்கும்
மழைக் காலத்திலோ அல்லது கார்த்திகை காலக்கட்டங்களில் வத்தல் குழம்பு உங்களுக்கு கைகொடுக்கும். சீசனில் விலை மலிவாக கிடைக்கும் காய்கறிகளை மொத்தமாக வாங்கி வத்தல் போட்டு வைத்துக்கொண்டால், அவை காய்கறிகள் உச்சத்தில் இருக்கும் போது கைகொடுக்கும். மங்காய், கத்திரிக்காய், முருங்கைய்காய், சுண்டக்காய் வத்தல் உங்கள் செலவை பாதியாக குறைக்கும். வத்தல் கைவசம் இல்லாத நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் வத்தல்களை தலா 50 கிராம் வாங்கினாலே போதும் ஒரு மாதத்திற்கு ஓட்டிவிடலாம்.
பருப்பு துவையல், வடக துவையல், கருவேப்பிலை துவையல் என தினம் ஒரு துவையல் செய்து காய்கறி செலவை குறைக்கலாம். ஆரோக்கியமும் கூடும் செலவும் குறையும். பிரண்டை, துதுவேளை துவையல்கள் உங்கள் உடல் நலனை பாதுகாக்கும் கவசமாகும்.
59
தொட்டுக்கொள்ள இவை போதுமே
கூட்டு, பொரியல் உள்ளிட்ட சைடிஷ்களுக்கு பதிலாக, கூழ்வடகம், பேட் வத்தல், காராபூந்தி வகைகளை பயன்படுத்தலாம். துவையலுக்கும் கூழ்வடகத்திற்கும் இருக்கும் காமினேஷன் வெகு சிறப்பாக இருக்கும். சுவைக்கு சுவை. சேமிப்புக்கு சேமிப்பு.
69
விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல்
பொதுமக்கள் இடைத்தரகர்களைத் தவிர்த்து அறுவடை செய்யும் இடத்திலேயே விவசாயிகளிடம் நேரடியாக சென்று மாங்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். இது செலவை பாதியாக குறைக்கலாம்.
79
வீட்டுத் தோட்டம் பயன்பாடு
வீட்டில் கொல்லைப் பகுதி இருப்பவர்கள், முருங்கைக்கீரை, காய் போன்றவற்றை அங்கேயே வளர்த்து பயன்படுத்துவதால், அது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. மக்களும் முடிந்தவரை தங்கள் வீட்டிலேயே தாவரங்களை வளர்க்கத் துவங்கினால் காய்கறி செலவு குறையும். அதேபோல் மாடித்தோட்டமும் உங்களுக்கு கை கொடுக்கும்.
89
சேமிப்பு முறை
வெங்காயம், தக்காளி போன்றவற்றை அவ்வப்போது வாங்க வேண்டியிருந்தாலும், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சாம்பாருக்குத் தேவைப்படும்போது சற்றுக் கூடுதலாக வாங்கிச் சேமித்து வைத்து கொண்டால், விலையேற்றத்தின் போது கவலைப்பட தேவையல்லை.
99
ஆண்டுதோறும் வரும் சவாலை சமாளிக்கலாம்
காய்கறி விலை உயர்வு என்பது ஆண்டுதோறும் வரும் சவால்தான். ஆனால் மக்கள் தங்கள் அன்றாடச் செலவுகளை சுறுசுறுப்பாக மாற்றி அமைப்பது, தங்கள் வீட்டிலேயே காய்கறிகளை வளர்க்க முயற்சிப்பது போன்றவை இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும். விலை உயர்ந்தா என்ன? புத்திசாலித்தனமா செலவாடினா காய்கறி பில்லையே பாதி ஆகிடும்