Vegetable price: இனி ஒரு வாரத்துக்கு 1 தக்காளிதான்.! சதம் அடித்த தக்காளி விலையால், புலம்பும் இல்லத்தரசிகள்.!

Published : Nov 27, 2025, 08:46 AM IST

கனமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி விலை சில்லறை விற்பனையில் கிலோ ரூ.100ஐத் தாண்டியுள்ள நிலையில், வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. 

PREV
17
1 கிலோ தக்காளி ரூ.100

கோயம்பேடு மொத்த சந்தையில் மழையால் வரத்து கடுமையாக குறைந்ததால் பல காய்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளது. குறிப்பாக, இல்லத்தரசிகளின் சமையலின் அடிப்படைப் பொருளான தக்காளி விலை தீவிரமாக உயர்ந்து, குடும்ப செலவுக்கு கூடுதல் சுமையாகியுள்ளது. தற்போது மொத்த சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.70க்கு விற்கப்படுகின்றது. ஆனால் சில்லரை சந்தைகளில் இது ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்து சாதாரண மக்களுக்கு ‘வாரத்துக்கு ஒரு தக்காளிதான் வாங்க முடியும் போல!’ என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

27
உச்சம் தொட்ட காய்கறி விலை

தக்காளியுடன் சேர்ந்து, வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. மழை காரணமாக விவசாய நிலங்களில் அறுவடை தாமதம், போக்குவரத்து தடங்கல் ஆகியவை சந்தைக்கு வரவு குறைய வழிவகுத்துள்ளன.

37
கோயம்பேடு காய்கறி விலை நிலவரம்

வெங்காயம் 1 கிலோ – ₹30

சின்ன வெங்காயம் 1 கிலோ – ₹80

பீன்ஸ் – ₹35

அவரக்காய் – ₹40 முதல் ₹60

கேரட் – ₹40

வெண்டைக்காய் – ₹70

பச்சை மிளகாய் – ₹40

பீட்ரூட் – ₹30

முள்ளங்கி – ₹25

குடைமிளகாய் – ₹70

கத்தரிக்காய் – ₹10 முதல் ₹25

மாங்காய் – ₹30 முதல் ₹40

இஞ்சி – ₹70 

47
1 கிலோ முருங்கைக்காய் ரூ.500

புடலங்காய் – ₹20

சுரைக்காய் – ₹20 முதல் ₹50

பச்சை பட்டாணி – ₹150

சேனைக்கிழங்கு – ₹46

பாவக்காய் – ₹40

தேங்காய் – ₹65 முதல் ₹68

கோஸ் – ₹20; பை – ₹700

முருங்கைக்காய் – ₹300 முதல் ₹500

உருளைக்கிழங்கு – ₹20 முதல் ₹35

பரங்கிக்காய் – ₹10

எலுமிச்சை – ₹50

சேப்பங்கிழங்கு – ₹15 முதல் ₹30

57
விலை உயர்வுக்கு காரணம் மழையின் தாக்கம்

கடந்த சில நாட்களாக நீடித்து வரும் மழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் காய்கறி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்ததும் விலை உயர்வும் நேரடியாக சில்லரை விற்பனையிலும் தாக்கம் இட்டுள்ளது.

67
தக்காளி விலை மேலும் உயரும்

மொத்த விலையில் உயர்வு ஏற்பட்டதால் சில்லரை விற்பனையாளர்கள் கூடுதல் விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் தக்காளி, வெங்காயம், கீரை வகைகள் உள்ளிட்ட அன்றாட சமையல் பொருட்களின் விலை உயர்வால் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

77
எப்போது விலை குறையும்?

மழை தணிந்து விவசாய வெளிகள் வழக்க நிலைக்கு திரும்பினால் மட்டுமே வரத்து கூடும், விலையும் சீராகும் என விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை, தக்காளி விலை உயர்வு குடும்ப செலவுகளை கூடுதலாகப் பாதித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories