ரயில் பயணிகள் கவனத்திற்கு..முழு ரீஃபண்ட் எப்போது கிடைக்கும்? புதிய ரூல்ஸ் இதோ

Published : Nov 26, 2025, 03:27 PM IST

இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு விதிகளைப் பயன்படுத்தி, ஐஆர்சிடிசி இணையதளத்தில் TDR (டிக்கெட் டெபாசிட் ரசீது) தாக்கல் செய்வதன் மூலம் உங்கள் டிக்கெட் பணத்தை எளிதாகத் திரும்பப் பெற முடியும்.

PREV
14
ரீஃபண்ட்

குளிர்காலம் தொடங்கியதால் அதிகாலையில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் ரயில்கள் நேரம் தவறுவது மிகவும் சாதாரணமானது. பல பயணிகள், “டிக்கெட் ரத்து செய்தால் பணம் பிடித்துவிடுவார்கள்” என்ற பயத்தால், ரயில் எவ்வளவு தாமதமானாலும் நிலையத்தில் காத்திருந்து வருத்தப்படுகிறார்கள். ஆனால், இந்திய ரயில்வே உண்மையில் பயணிகளுக்காக தனிப்பட்ட ரீஃபண்ட் மற்றும் இழப்பீடு விதிகள் அமைத்துள்ளது. இந்த விதிகளை அறிந்தால், நேரம் வீணாகாமல் உங்கள் டிக்கெட் பணத்தை எளிதில் திரும்பப் பெறலாம்.

24
எப்போது ரீஃபண்ட் கிடைக்கும்?

உங்கள் ரயில் 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் மற்றும் நீங்கள் பயணம் செய்ய விரும்பாதது நிலையில் இருந்தால், முழு தொகையும் ரீஃபண்ட் கிடைக்கும். ரயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டால், 100% ரீஃபண்ட் கிடைக்கும். எந்த கட்டணமும் பிடிக்கப்படாது. சில நேரங்களில் ரயில் வேறு வழித்தடத்தில் இயக்கப்படலாம். அந்த புதிய வழித் தளத்தில் பயணம் செய்ய விரும்பாவிட்டால் நீங்கள் ரீஃபண்ட் கோரலாம். மேலும், ரயில் முழு தூரத்தை சென்றடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டால், பயணம் செய்யாத தூரத்திற்கான தொகை திரும்ப கிடைக்கும்.

34
ஏசி டிக்கெட்

நீங்கள் ஏசி டிக்கெட் எடுத்தாலும் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றாலும், அல்லது உங்களை கீழ் வகுப்பிற்கு மாற்றினாலும், நீங்கள் விலை வித்தியாசத்திற்கான ரீஃபண்ட் பெறலாம். இதுவும் ரயில்வே விதிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகக் கூட கட்டணத்தில் இழப்பு ஏற்படக் கூடாது என்பதே ரயில்வேயின் நோக்கம்.

ரயில்வே ரீஃபண்ட் பெற TDR தாக்கல் செய்வது எப்படி?

ரயில்வே விதிகளின்படி ரீஃபண்ட் பெற தகுதி பெற்றிருந்தால், நீங்கள் TDR (டிக்கெட் டெபாசிட் ரசீது) தாக்கல் செய்ய வேண்டும் வேண்டும்.

  • ஐஆர்சிடிசி இணையதளத்தில் உள்நுழையுங்கள்.
  • எனது பரிவர்த்தனைகள் பகுதியைத் திறக்கவும்.
  • ரீஃபண்ட் தேவையான டிக்கெட்டைத் தேர்வு செய்யவும்.
  • File TDR ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • காரணம் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்கவும்.
  • இந்த செயல்முறை முழுவதும் ஆன்லைனில் நடைபெறும்.
44
ரீஃபண்ட் எப்போது வரும்?

TDR சமர்ப்பித்த பிறகு, ரயில்வே உங்கள் கோரிக்கையை சரிபார்த்து, ரீஃபண்ட் தொகையை 7 முதல் 15 வேலை நாட்களுக்கு உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பும். அதாவது, பொதுவாக இரண்டு வாரங்களில் பணம் திரும்ப வரும்.

TDR தாக்கல் செய்ய வேண்டிய முக்கிய கால வரம்புகள்:

1.ரயில் தாமதமானால்: 72 மணி நேரத்திற்குள்

2.ரயில் ரத்து செய்யப்பட்டால்: 3 மணி நேரத்திற்குள்

மேலும், TDR தாக்கலின் நிலையை ஐஆர்சிடிசி தளத்திலேயே எளிதாகச் சரிபார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories