இந்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த மாற்றம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பும் சுயநிலையும் அளிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்தியன் ரயில்வே தற்போது மிக முக்கியமான அதே நேரத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் குடும்ப நலனுக்காக இந்திய ரயில்வே முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, ரயில்வே ஊழியர் மறைவிற்குப் பிறகு, அவரது திருமணம் ஆகாத, விதவை அல்லது விவாகரத்து பெற்ற மகள்கள் மருத்துவ வசதிகள் மற்றும் பயணச் சலுகைகளைத் தொடர்ந்து பெற முடியும். பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களுக்கு இது பெரும் நிம்மதியாக கருதப்படுகிறது.
24
விதவை மகள்கள் உரிமை
இதற்கு முன்பு, ரயில்வே ஊழியர் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவிக்கு மட்டும் விதவை பாஸ் மற்றும் RELHS (ஓய்வு பெற்ற ஊழியர் தாராளமயமாக்கப்பட்ட சுகாதாரத் திட்டம்) கீழ் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. ஆனால், மனைவியும் மறைந்தால், மகளுக்கு இந்த சலுகைகள் கிடைக்காத நிலை இருந்தது. தற்போது, அந்த குறையை சரிசெய்யும் வகையில் ரயில்வே வாரியம் புதிய தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, சார்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மகள்கள் குடும்ப உறுப்பினர்களாக முழுமையாகக் கருதப்படுவார்கள்.
34
மகள்களுக்கு இலவச சிகிச்சை
இதனால், மருத்துவமனை ரயில்வேயில் இலவச சிகிச்சை, மருந்துகள் மற்றும் பிற மருத்துவ சேவைகள் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் யூனிவர்சல் மெடிக்கல் ஐடி கார்டுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயண வசதிகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் விதவை மனைவி மறைந்தவுடன் விதவை பாஸ் செல்லாது.
ஆனால் தற்போது, அந்த பயண அனுமதி குடும்பத்தில் தகுதி உள்ள மூத்த மகளுக்கு மாற்றப்படும். விதிகளுக்குள் வரும் பிற சார்பு உறுப்பினர்களும் இந்த பாஸை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும். இந்த முடிவு பெண்கள் சுயநிலையை வலுப்படுத்துவதுடன், ரயில்வே துறையின் சமூக பொறுப்பையும் வெளிப்படுத்துகிறது. நீண்ட காலமாக ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ள நிலையில், இந்த சலுகைகள் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் அளிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.