Gold Rate Today (ஜனவரி 10): தங்கத்தை ஓவர்டேக் செய்த வெள்ளி! ஒரே நாளில் ரூ.7,000 உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

Published : Jan 10, 2026, 09:44 AM IST

தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுவதால், அதன் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று (ஜனவரி 10) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,03,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

PREV
15

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தாலும் தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் வீணாகாது என்பவார்கள். அந்த வகையில் தங்கத்தை அதிக அளவு மக்கள் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக தங்கள் குழந்தைகளில் எதிர்கால சேமிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ அத்தியாவசிய தேவைக்கு நகைகளை கடைகளில் விற்கவோ அல்லது அடகு வைக்கவோ முடியும்.

25

இதன் காரணமாகவே மக்கள் மற்றவைகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள். இதன் காரணமாகவே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

35

நேற்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

45

இந்நிலையில் இன்றைய (ஜனவரி 10) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,03,200ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.12,900ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,909ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 111,272ஆக விற்பனையாகிறது.

55

வெள்ளி விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராம் ரூ.7 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.275,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories