உலகின் மிகப்பெரிய வீடு இதுதான்! முகேஷ் அம்பானியின் ரூ.15000 கோடி வீட்டை விட பல மடங்கு பெரியது!

First Published | Aug 20, 2024, 10:53 AM IST

உலகின் மிகப்பெரிய வீடான லட்சுமி விலாஸ் அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது. குஜராத்தில் அமைந்துள்ள இந்த அரண்மனை, பரோடாவின் கெய்க்வாட்களுக்கு சொந்தமானது. 

World's Largest House Laxmi Vilas

உலகின் மிகப்பெரிய ஆடம்பர இல்லம் என்று எடுத்துக் கொண்டால் பிரிட்டன் அரச குடும்பத்தின் வசிப்பிடமான பக்கிங்ஹாம் அரண்மனை அல்லது முகேஷ் அம்பானியின் ரூ. 15000 கோடி மதிப்புள்ள ஆன்டிலியா ஆகியவை தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் உலகின் மிகப்பெரிய வீடு, குஜராத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை தான். பரோடாவின் கெய்க்வாட்களுக்கு சொந்தமான இந்த அரண்மனை பற்றி வியப்பூட்டும் சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Laxmi Vilas

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை பக்கிங்ஹாம் அரண்மனையை விட 4 மடங்கு பெரியது மற்றும் ஒரு காலத்தில் குஜராத்தை ஆண்ட பரோடாவின் கெய்க்வாட்களுக்கு சொந்தமானது. பரோடாவின் உள்ளூர்வாசிகள் இன்று வரை இந்த அரச குடும்பத்தை இன்னும் உயர்வாக மதிக்கின்றனர். இந்த அரச குடும்பம் தற்போது சமர்ஜித்சிங் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ரதிகராஜே கெய்க்வாட் ஆகியோரின் தலைமையில் உள்ளது.

பிசினஸில் கலக்கும் ராதிகாவின் அஞ்சலி மெர்ச்சண்ட்.. குடும்ப சொத்து மதிப்பு இவ்வளவா?

Tap to resize

Laxmi Vilas

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 3,04,92,000 சதுர அடி பரப்பளவிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. அதே நேரம் பக்கிங்ஹாம் அரண்மனை 828,821 சதுர அடியிலும் பரவியுள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த வீடான, முகேஷ் அம்பானியின் ஆடம்பரமான மும்பை வீடு ஆண்டிலியா, 48,780 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய வீடாக கருதப்படுகிறது.

Laxmi Vilas

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை 170 அறைகள் மற்றும் ஒரு கோல்ஃப் மைதானத்துடன் உள்ளது.. இது 1890 ஆம் ஆண்டு மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் என்பவரால் கட்டப்பட்டது. இது கட்டப்பட்ட நேரத்தில், லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் விலை சுமார் 180,000 பிரிட்டிஷ் பவுண்ட் ஆகும்..

இந்த அரண்மனை தற்போது 44 வயதான ராதிகராஜே கெய்க்வாட்டின் இல்லமாக உள்ளது. 1978 இல் பிறந்த ராதிகா ராஜே,  குஜராத்தின் வான்கனேர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மகாராஜா ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் வாரிசான சமர்ஜித்சிங் கெய்க்வாட்டை ராதிகா ராஜே திருமணம் செய்து கொண்டார்.. இவரின் தந்தை டாக்டர் எம்.கே. ரஞ்சித்சிங் ஜாலா ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவதற்காக அரச பட்டத்தை துறந்தார்.

கோடீஸ்வரர்களின் பொதுவான பழக்கம் இதுதானா..? அதுதான் அவர்களின் ரகசியமா..?

Laxmi Vilas

ராதிகராஜே கெய்க்வாட் டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இந்திய வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மகாராஜா சமர்ஜித் சிங் கெய்க்வாட்டை திருமணம் செய்வதற்கு முன்பு, ராதிகாராஜே கெய்க்வாட் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!