ரூ.15 லட்சம் விபத்து காப்பீடு!
அஞ்சல் துறை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கடிதங்கள், எஸ்.டி, ஆர்டர்கள். ஆனால் காப்பீட்டு பாலிசிகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆண்டுக்கு வெறும் ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் விபத்து காப்பீட்டை இந்திய தபால் துறை வழங்குகிறது. அதுமட்டுமின்றி அந்த குடும்பத்திற்கு உறுதுணையாக மேலும் பல சலுகைகளை வழங்குகிறது.
மருத்துவமனை செலவுகளுக்கும் பணம்
தபால் துறையில் ஆண்டுக்கு ரூ.755 பீரிமியம் செலுத்தினால் ரூ.15 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரூ.1 லட்சம் மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகிறது. அதாவது பாலிசி எடுத்தவர் ஏதேனும் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்ந்தால் செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இதனுடன் ஐசியுவில் இருந்தால் ஒரு நாளைக்கு ரூ.2000, சாதாரண வார்டில் இருந்தால் ஒரு நாளைக்கு ரூ.1000 என செலவுகளுக்காக தபால் துறை வழங்குகிறது. விபத்தில் இறந்தால் நாமினியாக உள்ளவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும்.
படிப்புக்கு இன்னும் ஒரு லட்சம்!
அதுமட்டுமின்றி பாலிசிதாரருக்கு படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களின் படிப்புக்காக இன்னும் ஒரு லட்சம் ரூபாயை தபால் துறை வழங்குகிறது. இதெல்லாம் வெறும் ரூ.755 பாலிசிக்கே இத்தனை சலுகைகளை வழங்குகிறது இந்திய தபால் துறை. இந்த பாலிசியைப் பெற உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தைத் தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.