பெற்றோர்கள் இந்த தவறை செய்தால் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கு நிரந்தரமாக மூடப்படும்..

First Published | Aug 20, 2024, 9:56 AM IST

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் அதிக வட்டி மற்றும் பல நன்மைகள் உள்ளன. ஆனால் சில விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கணக்கு மூடப்படும்.

Sukanya Samriddhi yojana

மத்திய அரசு சாமானிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.. தபால் அலுவலகம் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் சுகன்யான் சம்ரிதி யோஜனா கணக்கை திறக்கலாம்.  ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். ஆனால் ஒரு சிறிய தவறு கணக்கு மூடப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் சில விதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Sukanya Samriddhi yojana

பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெண் குழந்தையின் பெற்றோர்/சட்டப்பூர்வ பாதுகாவலரின் புகைப்படம், பெற்றோர்/பாதுகாவலரின் KYC ஆவணங்கள் (அடையாளம் & முகவரிச் சான்று) ஆகிய ஆவணங்கள் தேவை.

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ஒரு நிதியாண்டிற்கு ரூ 250 மற்றும் அதிகபட்சத் தொகை ரூ 1,50,000. கணக்கு வைத்திருப்பவர் (பெண் குழந்தை) 18 வயதை அடையும் வரை பணம் எடுப்பது அனுமதிக்கப்படாது. கணக்கு வைத்திருப்பவர் 18 வயதை அடைந்த பிறகு, கல்விச் செலவுகள் அல்லது திருமணச் செலவுகளைச் சமாளிக்க கணக்கு இருப்பில் 50% வரை ஓரளவு திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு ரூ.7 முதலீட்டில் மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும் அடல் பென்ஷன் யோஜனா!

Tap to resize

Sukanya Samriddhi yojana

சுகன்யா சம்ரித்தி யோஜனாவைத் தொடங்கிய பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணக்கு துவங்கிய பின், ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 150 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம். ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்யத் தவறினால், கணக்கு மூடப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். நிதியாண்டின் இறுதிக்குள் அதாவது மார்ச் 31க்குள் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும்.

Sukanya Samriddhi yojana

SSY கணக்கிற்கு நிதி பரிமாற்றம் எந்த வங்கி கிளையிலும் ரொக்கம்/ காசோலை/ டிமாண்ட் டிராஃப்ட்கள் மூலம் செய்யப்படலாம்.
பெற்றோர்/பாதுகாவலர் SSY கணக்கை இன்டர்நெட் பேங்கிங்கில் பயனாளியாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை பெண் குழந்தையின் பெயரில் இயற்கை அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கைத் திறக்கலாம். டெபாசிட் செய்பவர் ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கை மட்டுமே திறந்து செயல்பட முடியும். ஒரு பெண் குழந்தையின் இயற்கையான அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கைத் திறக்க அனுமதிக்க முடியும். இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால், இரண்டாவது பிரசவமாகவோ அல்லது முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாலோ பெண் குழந்தையின் பெயரில் மூன்றாவது கணக்கைத் திறக்கலாம்.

Rs 755 Postal Policy | ஆண்டு பிரீமியம் ரூ.755 மட்டுமே! - 15 லட்சத்திற்கு விபத்து காப்பீடுடன் பல சலுகைகள்!

Sukanya Samriddhi yojana

சுகன்யா சம்ரிதி யோஜனாவைத் தொடங்கிய பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணக்கு துவங்கிய பிறகு, ஆண்டுக்கு குறைந்தது 150 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம். ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்யத் தவறினால், கணக்கு மூடப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். நிதியாண்டின் இறுதிக்குள் அதாவது மார்ச் 31க்குள் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்ய வேண்டும்.

Latest Videos

click me!