Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்துள்ள டிடிஎஃப் வாசன், சக போட்டியாளரான ஜேசனுடன் சண்டையிட்டுள்ளார்.
தமிழ் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 10-வது சீசனில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் டாஸ்க்குகளில் காட்டும் திறமை ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. போட்டியாளர்களின் ஆட்டம் குறித்து ரசிகர்கள் தங்களது ஆதரவை வாக்குகள் மூலம் வெளிப்படுத்துவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு வாரமும் நடைபெறும் நாமினேஷன் மற்றும் எவிக்ஷன் ப்ராசஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் தொடர்ந்து நான்கு வாரங்களாக சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் ஷமாவுக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாஸை அவர் 10-வது வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாமினேஷனில் அவரது பெயர் இடம்பெற்றாலும், இந்த பாஸை பயன்படுத்தும் பட்சத்தில் எவிக்ஷன் ஆபத்தில் இருந்து அவர் தப்பிக்க முடியும். ஆனால், அவர் பாஸை பயன்படுத்தும் வரை ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் அவரது பெயர் இடம்பெறுவதற்கான சூழல் தொடரும் என கூறப்படுகிறது.
34
5-வது வார நாமினேஷனில் சிக்கியது யார்?
இதற்கிடையே, பிக்பாஸ் வீட்டில் 5-வது வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றுள்ளது. வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் சக போட்டியாளர்களின் பெயர்களை தெரிவிக்கின்றனர். இதில் ஷமா மற்றும் லட்சுமி பிரியா ஆகியோரின் பெயர்கள் பல போட்டியாளர்களால் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், இந்த வார நாமினேஷனில் அவர்கள் இருவரும் இடம்பெற்று உள்ளனர். இதுதவிர அஸ்மிதா, சாந்தினி, அன்சர், முனியம்மாள், ஜேசன் ஆகியோரும் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நாமினேஷனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள டிடிஎஃப் வாசனுக்கும், காமன்மேன் போட்டியாளரான ஜேசனுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. அதில் ஜேசன் தன்னுடைய பெட் அருகே செருப்புகள் இருப்பதை பார்த்து டென்ஷனாகி இன்னொருத்தரோட செருப்பு இங்க வந்தா, செருப்பு வெளில பறக்கும் என ஜாடமாடையாக சொல்ல, உடனே அருகில் இருந்த டிடிஎஃப் வாசன் டென்ஷனாகி அவரிடம் கேமுக்காக இதை வச்சிருக்கோம் என சொல்ல, உடனே ஜேசனுக்கு சப்போர்டாக அக்ஷிதா வர, அவரும் வாசனுடன் வாக்குவாதம் செய்கிறார். அப்போது குறுக்கிடும் ஜேசன், எங்க கேப்டனை அப்படி பேச எவனுக்கும் ரைட்ஸ் இல்ல என சொல்லி எகிறுகிறார். இதனால் டென்ஷனான வாசன், அவருடன் சண்டைக்கு செல்ல, இருவரும் அடிதடியில் இறங்கும் நிலைக்கு செல்கிறார்கள். உடனே அங்கிருந்த போட்டியாளர்கள் இருவரையும் பிரித்துவிடுகிறார்கள். அதன்பின் என்ன ஆனது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.