Bigg Boss 10 : வினோத் பாபுவிடம் இருந்து பதவியை பறித்த ஹவுஸ்மேட்ஸ்... அடுத்ததாக பிக்பாஸ் அரியணையில் அமர்ந்தது யார்?

Published : Nov 11, 2026, 11:33 AM IST

Bigg Boss Tamil Season 10 : பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஜூனியர் பிக்பாஸ் ஆக வினோத் பாபு இருந்த நிலையில், தற்போது அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி உள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்.

PREV
14
Bigg Boss Tamil Season 10

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி 9 வாரங்களைக் கடந்து தற்போது 10-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆரம்பத்தில் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் போட்டியில், அடுத்தடுத்து நடைபெற்ற வெளியேற்றங்களால் தற்போது 13 பேர் மட்டுமே வீட்டிற்குள் எஞ்சியுள்ளனர். குறிப்பாக, கடந்த வார இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதிய மாற்றத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமாக போட்டியாளர்களுக்கு அறிவுரைகளையும் கட்டளைகளையும் வழங்கும் பிக்பாஸின் குரல் தற்போது வீட்டிற்குள் ஒலிக்காமல் இருக்கிறது. அதற்குப் பதிலாக, போட்டியாளர்களில் ஒருவரே 'ஜூனியர் பிக்பாஸ்' ஆகத் தேர்வு செய்யப்பட்டு வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று வருகிறார்.

Bigg Boss 10 : பிக்பாஸ் வீட்டில் அஸ்மிதா சிக்கினாரா? சீரியல் கில்லர் டாஸ்க்கில் முனியம்மாள் கொடுத்த அதிர்ச்சி!

24
அடுத்தடுத்து மாறிய ஜூனியர் பிக்பாஸ்!

முதலில் வினோத் பாபு ஜூனியர் பிக்பாஸாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் வீட்டை வழிநடத்திய விதம் சரியாக இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அந்தப் பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது முனியம்மாள் ஜூனியர் பிக்பாஸாகச் செயல்பட்டு வருகிறார். இதனால் வீட்டிற்குள் அதிகாரம், கட்டுப்பாடு மற்றும் போட்டியாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன.

Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?

34
நீதிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு!

இந்தச் சூழலில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் 66-வது நாளுக்கான முதல் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் புரோமோவில், வீட்டிற்குள் நீதிமன்றத்தைப் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் குற்றவாளிகள் நிறுத்தப்படும் கூண்டு போன்ற அமைப்பில் வினோத் பாபு நிற்க, அவரிடம் வழக்கறிஞர் வேடத்தில் இருக்கும் சாதிகா சரமாரியாகக் கேள்விகளை எழுப்புகிறார்.

அப்போது வினோத் பாபுவுக்கும் ஜேசனுக்கும் இடையே கருத்து மோதல் உருவாகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட, சிறிது நேரத்திலேயே அந்த விவாதம் தீவிரமான சண்டையாக மாறுகிறது. இதனால் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

TTF Vasan Net Worth : யூடியூப்பில் கோடிக்கணக்கில் வருமானம்... டிடிஎஃப் வாசனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

44
வினோத் பாபுவுக்கு எதிராக வெடித்த விவாதம்!

ஏற்கெனவே ஜூனியர் பிக்பாஸ் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்ட வினோத் பாபு, தற்போது நீதிமன்ற டாஸ்க்கில் கேள்விகளை எதிர்கொள்ளும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்றுள்ளன. ஜேசனுடனான அவரது வாக்குவாதம் எந்த அளவுக்குச் செல்லும், இந்த விவகாரத்தில் மற்ற போட்டியாளர்கள் யார் பக்கம் நிற்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

66-வது நாளிலேயே இப்படி ஒரு மோதல் வெடித்துள்ளதால், இன்றைய எபிசோடில் மேலும் என்னென்ன பிரச்சினைகள் வெடிக்கப்போகின்றன என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Bigg Boss Thamarai Selvi : நாங்க பிரிஞ்சிட்டோம்... பிக் பாஸ் தாமரைச் செல்வியின் கணவர் போட்ட டைவர்ஸ் பதிவால் வெடித்த சர்ச்சை

Read more Photos on
click me!

Recommended Stories