Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?

Published : Nov 04, 2026, 02:39 PM IST

Bigg Boss Mid Week Eviction : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதன்முறையாக மிட் வீக் எவிக்‌ஷன் நடைபெற்றுள்ளதாம். அதில் யார் எலிமினேட் ஆனார்கள் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Bigg Boss Mid Week Eviction

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களின் எண்ட்ரிக்கு பின்னர் சூடுபிடிக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக வைல்டு கார்டு போட்டியாளராக டிடிஎஃப் வாசன் உள்ளே வந்ததில் இருந்து தான் கேம் டோட்டலாக மாறி இருக்கிறது. அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த ஆண்டு டைட்டில் வின்னர் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

24
மிட் வீக் எவிக்‌ஷன்

பிக் பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், எஞ்சியுள்ள போட்டியாளர்களை டபுள் எவிக்‌ஷன் முறையில் வெளியேற்ற வாய்ப்புள்ளது. அதில் மற்றொரு ட்விஸ்டாக இந்த வாரம் மிட் வீக் எவிக்‌ஷன் நடைபெற்றிருப்பதாக தகவல் கசிந்துள்ளன. இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களில் இதுவரை கம்மியான வாக்குகளை பெற்றுள்ள போட்டியாளர் மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று பிக் பாஸ் வீட்டில் மிட் வீக் எவிக்‌ஷன் நடந்துள்ளதாம்.

34
எலிமினேட் ஆனது யார்?

அப்படி மிட் வீக் எவிக்‌ஷன் மூலம் அக்‌ஷிதா எலிமினேட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வாரத்திற்கான ஓட்டிங்கில் அக்‌ஷிதா மற்றும் அவருடைய அண்ணன் அவினாஷ் தான் கடைசி இரண்டு இடத்தில் உள்ளனர். இதில் அக்‌ஷிதாவை வெளியேற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அக்‌ஷிதா கடந்த வாரம் விஜய் சேதுபதியிடம் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர் டிடிஎஃப் வாசனிடம் வேண்டுமென்றே வம்பிழுத்தது, அவரை பாத்திரத்தால் அடித்தது போன்றவை அக்‌ஷிதாவுக்கு நெகடிவ் ஆக மாறியது.

44
அக்‌ஷிதாவுக்கு பின்னடைவு ஏன்?

அதுமட்டுமின்றி கடந்த வாரம் இரண்டு முறை அக்‌ஷிதாவுக்கு வலிப்பு வந்தது. ஒருமுறை கேம் ஆடும் போது மயங்கி விழுந்து வலிப்பு வந்தது. அப்போது அவரை சக போட்டியாளர்கள் உடனடியாக மருத்துவ அறைக்கு தூக்கிச் சென்றனர். அதன்பின்னர் வார இறுதியில் விஜய் சேதுபதி, அக்‌ஷிதா, டிடிஎஃப் வாசனை தாக்கியதற்கான ஆதாரத்துடன் கூடிய குறும்படத்தை இரண்டு முறை திரையிட்டார். அப்போது பாத்ரூமில் சென்று ஏங்கி ஏங்கி அழுதபோது அக்‌ஷிதாவுக்கு வலிப்பு வந்தது. பின்னர் மருத்துவ உதவி கொடுக்கப்பட்ட பின்னரே அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

அக்‌ஷிதா இந்த பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டாக உள்ளே வந்த முதல் நாளே அவருக்கு தலைவர் பதவியும் கிடைத்தது. அந்த ஒரு வாரம் மட்டும் தான் ஆக்டிவாக இருந்தார். மற்றபடி, வீட்டில் ஓபி அடித்துக் கொண்டு சுற்றினார். புரோமோவில் இடம்பெற வேண்டும் என்பதற்காக முகேஷுடன் சேர்ந்து லவ் கண்டண்டும் கொடுத்து வந்தார். இதை தவிர்த்து பார்த்தால் அவர் இந்த பிக் பாஸ் வீட்டில் சரிவர விளையாடவில்லை. அதன் எதிரொலியாக தான் இந்த வாரம் அவரை மிட் வீக்கில் எலிமினேட் செய்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories