Bigg Boss Eviction : பிக் பாஸ் சீசன் 10-ல் நடந்த ஷாக்கிங் எலிமினேஷன்... இந்த வாரம் எவிக்ட் ஆனது இவரா?

Published : Sep 18, 2026, 09:26 AM IST

Bigg Boss Tamil Season 10 Eviction : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர்.

PREV
14
Bigg Boss Tamil Season 10 Eviction

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆனாலும், இந்த சீசன் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசன் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. அதில் நிகழ்ச்சி தொடங்கிய நான்காவது நாளே பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக காமன் மேனில் இருந்து மணிவண்ணன் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார். இதையடுத்து இரண்டாவது வாரத்தில் ஆனந்தி வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தார்.

Bigg Boss : ஷமாவின் கேப்டன் பதவி பறிபோகிறதா? பிக் பாஸ் டெமாகிரசி ரூமில் நடந்த எதிர்பாரா ட்விஸ்ட்

24
பிக் பாஸ் முதல் எவிக்‌ஷன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். வார வாரம் வீட்டில் உள்ள போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் மக்கள் யாருக்கு குறைவான வாக்குகளை அளிக்கிறார்களோ அந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார். ஆனால் இந்த சீசனில் புதுவிதமாக, வீட்டின் கேப்டனாக இருப்பவர், டாஸ்கில் சரியாக பர்ஃபார்ம் செய்யாத மூவரை தேர்வு செய்வார். அவர்களில் யார் வெளியேற வேண்டும் என சக போட்டியாளர்கள் ஓட்டிங் செய்து, அதில் யாருக்கு அதிக வாக்குகள் வருகிறதோ அவர் எலிமினேட் செய்யப்படுவார். அப்படி கடந்த வாரம் சாவின்யா எலிமினேட் செய்யப்பட்டார்.

34
இந்த வாரம் சிக்கியது யார்?

வீட்டின் தலைவரால சரியாக பர்ஃபார்ம் செய்யாத போட்டியாளர்கள் மூவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படி இந்த வார தலைவர் ஷமாவால் ஜாவித், ஜேசன் கெளஷி, அஷ்மிதா ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து தான் ஒருவர் போட்டியாளர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டிருக்கிறார். அந்த வகையில் ஜாவித் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற கனவோடு பிக் பாஸ் வீட்டுக்கு வந்த ஜாவித், இப்படி சக போட்டியாளர்களால் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

44
ரசிகர்கள் அதிருப்தி

ஒவ்வொரு வாரம் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தான் இதுவரை நடந்த 9 சீசன்களிலும் எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது. ஆனால் இப்படி போட்டியாளர்களால் எலிமினேட் செய்யப்படுவது நியாயமற்றது என்றும், இந்த எவிக்‌ஷன் முறையை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. ஜாவித் தவிர்த்து மக்கள் அளிக்கும் ஓட்டிங் அடிப்படையிலும் இந்த வாரம் ஒரு போட்டியாளர் எவிக்ட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த போட்டியாளர் யார் என்பதை இந்த வாரம் வீக் எண்ட் எபிசோடில் தெரியவரும்.

Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு

Read more Photos on
click me!

Recommended Stories