Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு

Published : Sep 16, 2026, 01:56 PM IST

Bigg Boss Tamil : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், நடைபெற்ற நாக் அவுட் டாஸ்க்கில் லட்சுமி பிரியாவுக்கும், ஆனந்திக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.

PREV
14
Bigg Boss Tamil Season 10

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆரம்பம் முதலே வீட்டிற்குள் போட்டி சூடுபிடித்துள்ளதுடன், ஒவ்வொரு நாளும் புதுப்புது சலசலப்புகளும் அரங்கேறி வருகின்றன. இந்த சீசனின் ஆரம்ப வாரத்திலேயே ஏராளமான டாஸ்க்குகள் வழங்கப்பட்டதால், நிகழ்ச்சியைப் பார்ப்பதில் ரசிகர்களுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 24 மணி நேரமும் ஓடிடியில் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்காக சில புதிய முயற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்

24
இரவிலும் டாஸ்க் கொடுக்கும் பிக் பாஸ்

முந்தைய சீசன்களில் இரவு நேரங்களில் போட்டியாளர்கள் தூங்குவது அல்லது ஒருசிலர் பேசிக்கொண்டிருப்பது போன்ற காட்சிகளே பெரும்பாலும் ஒளிபரப்பாகும். இதனால் இரவு நேர பார்வையாளர்களுக்காக இந்த சீசனில் ‘நைட் டாஸ்க்’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் போட்டியாளர்கள் இரவு முழுவதும் தூங்காமல், கொடுக்கப்படும் பணிகளை மேற்கொண்டு பொழுதை கழிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர்ச்சியான டாஸ்க்குகள் காரணமாக போட்டியாளர்களுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் அதிகரித்துள்ளது.

34
கருத்து வேறுபாடு

அதன் விளைவாக ஒவ்வொரு எபிசோடிலும் கருத்து வேறுபாடு, வாக்குவாதம் என வீட்டிற்குள் பரபரப்பான சூழல் உருவாகி வருகிறது. சீசன் தொடங்கி தற்போது இரண்டாவது வாரமே ஆன நிலையில், போட்டி ஏற்கனவே இறுதிக்கட்டத்தை நெருங்கியதைப் போல மிகவும் தீவிரமாக மாறியுள்ளது. டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் சில நேரங்களில் போட்டியாளர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்படும் அளவுக்கும் நிலைமை சென்றுள்ளது.

44
டாஸ்கில் வெடித்த மோதல்

அந்த வகையில், இன்றைய டாஸ்க்கில் ‘நாக் அவுட்’ எனும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே அணியில் இடம்பெற்றிருந்த லட்சுமி பிரியா மற்றும் ஆனந்தி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் முதல் புரோமோவில் வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதில் லட்சுமி பிரியா ஆனந்தியை தள்ளிவிட, அதில் காயம் அடைந்த ஆனந்தி வலியால் துடிக்கிறார். பின்னர் அவரை சக போட்டியாளர்கள் சிலர் தூக்கிச் செல்லும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

அதேபோல் இரண்டாவது புரோமோவில் ஜேசன் கவுஷி மற்றும் ஷாமா இடையேயான மோதல் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அதில் ஜேசன் ஷாமாவை இழுத்து கீழே தள்ளிவிட்டு மேலே செல்லமுயற்சிக்க, அவரை ஷாமா தடுத்து நிறுத்துவதோடு, அவரை கிண்டல் செய்யும் வகையில் பேசுகிறார். ஷாமாவின் பேச்சால் கடுப்பாகும் ஜேசன் கவுசி அவரிடம் சண்டைபோடுகிறார். இதனால் இன்றைய பிக் பாஸ் எபிசோடு, அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்

Read more Photos on
click me!

Recommended Stories