Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்

Published : Sep 15, 2026, 01:59 PM IST

Bigg Boss Tamil 10: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் லீடராக தேர்வு செய்யப்பட்டு உள்ள ஷமாவுடன் சக போட்டியாளரான அவினாஷ் மோதலில் ஈடுபட்டு உள்ளார்.

PREV
14
Bigg Boss Tamil 10 Promo

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6ந் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் காரணமாக ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

Bigg Boss 10 : எஸ்கேப் ஆன முனியம்மா... எலிமினேட் ஆனது யார்? பிக் பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு எவிக்‌ஷனா..!

24
வைல்ட் கார்டு எண்ட்ரி

இந்த சீசனில் மொத்தம் 19 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக ப்ளாக் பாண்டி வீட்டில் இருந்து வெளியேறினார். இதையடுத்து நாமினேஷனில் இடம்பெற்றிருந்த சாவன்ய வேலு, சக போட்டியாளர்களின் முடிவின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வழக்கமான நடைமுறைகளில் இருந்து மாறுபட்ட இந்த வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

34
அதிர வைத்த ஆனந்தியின் எண்ட்ரி

மேலும், கடந்த வார இறுதியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி எந்தவொரு போட்டியாளரையும் வெளியேற்றாமல் நிகழ்ச்சியை நகர்த்தினார். இதற்கிடையில் ப்ளாக் பாண்டிக்கு மாற்றாக மணிவண்ணன் வைல்ட்கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். தற்போது இந்த வாரத்தில் நடிகை ஆனந்தி அஜய்யும் வைல்ட்கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

44
ஷமாவுடன் சண்டை போட்ட அவினாஷ்

இந்நிலையில், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் தினசரி புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், 9-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், இந்த வாரத்தின் வீட்டுத் தலைவராக இருக்கும் ஷமாவுக்கும் போட்டியாளர் அவினாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு டாஸ்க்கின் போது லீடராக ஷமா எடுத்த முடிவை அவினாஷ் எதிர்க்க, இருவருக்கும் இடையே கருத்து மோதல் உருவாகிறது. இதனால் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஷமாவின் முடிவை அவினாஷ் ஏன் எதிர்த்தார்? இருவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது குறித்த முழு விவரமும் இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகும்போது தெரியவரும்.

பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்

Read more Photos on
click me!

Recommended Stories