ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் அணிகள் மோதும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆதரவு யாருக்கு என்று பார்ப்போம்.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இன்றுடன் முடிகிறது. இன்று நடக்கும் ஃபைனலில் அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட போர்ச்சுகல், பிரேசில், ஜெர்மனி ஆகிய 3 அணிகளும் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறின.
தனது கடைசி உலக கோப்பையை ஆடும், சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, அர்ஜெண்டினாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் களமிறங்கினார். அவரது கனவை நனவாக்கும் கடைசி படிக்கட்டில் அடிவைத்து விட்டார். ஃபைனலுக்கு அர்ஜெண்டினா அணி முன்னேறி, வலுவான அணியான நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸை எதிர்கொள்கிறது.
IPL Mini Auction 2023: அடிப்படை விலை வாரியாக ஏலத்தில் இடம்பெறும் மொத்த வீரர்களின் லிஸ்ட்
அர்ஜெண்டினாவுக்கு மெஸ்ஸி என்றால், ஃபிரான்ஸுக்கு கிலியன் எம்பாப்பே. இந்த போட்டி அர்ஜெண்டினா - ஃபிரான்ஸுக்கு இடையேயான போட்டியாக ரசிகர்கள் பார்க்கவில்லை. மெஸ்ஸி - எம்பாப்பே இடையேயான போட்டியாகத்தான் பார்க்கிறார்கள். இந்த உலக கோப்பையில் ஃபைனலுக்கு முன்பு வரை மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே ஆகிய இருவரும் தலா 5 கோல்கள் அடித்திருப்பதால், ஃபைனலில் அதிக கோல்கள் அடிப்பவர் கோல்டன் பூட்டை வெல்வார். அவர்கள் அடிக்கும் கோல்கள் அவர்கள் கோல்டன் பூட் வெல்ல மட்டுமல்லாது, அவர்களது அணி கோப்பையை வெல்லவும் உதவும்.
சமபலம் வாய்ந்த, சம அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட அர்ஜெண்டினாவும் ஃபிரான்ஸும் மோதும் ஃபைனல் போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ஆதரவை பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த ஃபைனல் குறித்து வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பின் பேசிய இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கால்பந்து மீது அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் பயிற்சியின்போதே கால்பந்து ஆடுவோம். நமது கிரிக்கெட் அணியில் அதிகமானோரின் ஆதரவு எந்த அணிக்கு என்று தெரியவில்லை. ஆனால் பிரேசிலுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இங்கிலாந்து அணிக்கும் சிலர் ரசிகர்கள்.
டிரெஸிங் ரூமில் ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளை பார்த்து ரிலாக்ஸாக இருப்போம். அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான இறுதிப்போட்டி பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். 2 அணிகளுக்கும் எங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால், இரு குழுக்களாக தங்கள் ஆதர்ச அணிக்கு ஆதரவளித்து போட்டியை பார்ப்போம் என்று ராகுல் கூறினார்.