ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் 3வது இடத்திற்கான போட்டியில் மொராக்கோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3வது இடத்தை பிடித்தது குரோஷியா.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜெண்டினா, ஃபிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினாவும், 2வது அரையிறுதி போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி ஃபிரான்ஸும் ஃபைனலுக்கு முன்னேறின.
undefined
அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான ஃபைனல் நாளை(டிசம்பர் 18) நடக்கிறது. அரையிறுதியில் தோற்ற குரோஷியா - மொராக்கோ அணிகளுக்கு இடையேயான 3வது இடத்திற்கான போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டி ஆரம்பித்த 7வது நிமிடத்திலேயே குரோஷியா வீரர் ஜோஸ்கோ முதல் கோல் அடித்தார். அடுத்த 2வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அச்ரஃப் டாரி கோல் அடித்தார். 10 நிமிடத்திற்குள்ளாகவே ஆட்டம் 1-1 என சமனடைந்துவிட்டது.
IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்
எனவே வெற்றிக்கான 2வது கோல் அடிக்க, இரு அணிகளுமே கடுமையாக போராட, ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் மிஸ்லவ் ஆர்சிக் கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 2-1 என குரோஷியா அணி முன்னிலை பெற்றது. 2வது பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக முயன்றன. ஆனால் 2ம் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்காததால் 2-1 என வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்தது குரோஷியா அணி.