FIFA World Cup: சர்வதேசத்தை அதிரவைத்த கால்பந்து வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டுகள்

By karthikeyan VFirst Published Nov 28, 2022, 1:47 PM IST
Highlights

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை சமயங்களில் கால்பந்து உலகை அதிரவைத்த கால்பந்து வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு சம்பவங்களை பார்ப்போம்.
 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை நடத்தும் கத்தாரில் அந்நாட்டு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மது அருந்த தடை, பெண்களுக்கு உடை கட்டுப்பாடுகள், இசைக்கருவிகள் எடுத்துச்செல்ல தடை என கடும் கட்டுப்பாடுகளை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உலக கோப்பை கத்தாரில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டில், 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக கோப்பை தொடர் திருவிழாவை போல ரசிகர்களால் கொண்டாடப்படும். அதேவேளையில், ஃபிஃபா உலக கோப்பை தொடர்களின் போது சர்ச்சைகளும் எழும். அந்தவகையில், ஃபிஃபா உலக கோப்பை சமயங்களில் உலகையே உலுக்கிய பாலியல் சர்ச்சை சம்பவங்களை பார்ப்போம்.

FIFA World Cup 2022: அபாரமாக ஆடிய குரோஷியா, 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி மாபெரும் வெற்றி

செக் குடியரசு கால்பந்து அணி மீதான பாலியல் குற்றச்சாட்டு:

செக் குடியரசு கால்பந்து அணி 2010 ஃபிஃபா உலக கோப்பைக்கு தகுதிபெற தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் பீட்டர் ராடா மற்றும் 6 வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டின் விளைவாக அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்கள் பாலியல் தொழிலாளிகளுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்விளைவாக அவர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனால் அந்த அணி ஸ்லோவேக்கியாவிடம் 2-1என்ற கோல் கணக்கில் தோற்று 2010 ஃபிஃபா உலக கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பையும் இழந்தது.

ஃபிராங்க் ரிப்பெரி, கரிம் பென்ஸெமா மீதான பாலியல் குற்றச்சாட்டு: 

2010 ஃபிஃபா கால்பந்து உலக கோப்பைக்கு முன்பாக ஃபிரான்ஸ் வீரர் ஃபிராங்க் ரிப்பெரி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். அவருடன் கரிம் பென்ஸெமா மற்றும் சிட்னி கோவ்லு ஆகிய இருவரும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினர். ஃபிரான்ஸ் அணியின் 3 வீரர்கள் மொத்தமாக சிக்கிய மாபெரும் பாலியல் வழக்கு அது. இவர்கள் மூவரும், இரவு பாலியல் விடுதிக்கு சென்றதாகவும், பென்ஸெமா மற்றும் ரிப்பெரி ஆகிய இருவரும் பாலியல் தொழிலில் இருந்து ஒரு சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சக வீரரின் மனைவியுடன் உறவில் இருந்த யு.எஸ்.ஏ அணி கேப்டன்:

1988 ஃபிஃபா உலக கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்பாக, யு.எஸ்.ஏ அணியின் கேப்டன் ஜான் ஹார்க்ஸை அணியிலிருந்து வெளியேறும்படி கூறினார் பயிற்சியாளர் ஸ்டீவ் சாம்ப்சன். யு.எஸ்.ஏ கேப்டன் ஜான் ஹார்க்ஸ், அந்த அணியின் மற்றொரு வீரரான எரிக் வைனால்டாவின் மனைவியுடன் உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை ஜான் ஹார்க்ஸ் மறுத்தார். ஆனாலும் அவரால் 1988 ஃபிஃபா உலக கோப்பையில் யு.எஸ்.ஏ அணிக்காக ஆடமுடியவில்லை.

கூண்டோடு சிக்கிய மெக்ஸிகோ அணி:

2018ல் ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா உலக கோப்பைக்கு முன், பிரியாவிடை விருந்தில் மெக்ஸிகோ அணி வீரர்கள் 30 பாலியல் தொழிலாளிகளுடன் உல்லாசமாக இருந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோ நாடே இந்த சம்பவத்தால் அதிர்ந்து நின்றது.

FIFA World Cup 2022: உலக கோப்பையில் மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி

சக வீரரின் மனைவியுடன் உறவில் இருந்த ஃபிரான்ஸ் வீரர் லாரியஸ்

ஃபிரான்ஸ் கால்பந்து வீரர் லாரியஸ் அவரது சக வீரரான மைக்கேல் பிளாடினியின் மனைவியுடன் உறவில் இருந்தது அம்பலப்பட்டது. அதன்விளைவாக 1982 ஃபிஃபா உலக கோப்பைக்கு முன்பாக ஃபிரான்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார் லாரியஸ். 
 

click me!