இவரும் ரஜினி ரசிகர் தானா! குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்க்கச் சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ!

By SG Balan  |  First Published Aug 17, 2023, 7:12 PM IST

உலகப் புகழ்பெற்ற போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தைப் பார்க்கச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் 'தலைவர்' ரசிகர்தான் என்று தற்போது தெரியவந்துள்ளது. இப்போது துபாயில் இருக்கும் ரொனால்டோ ரஜினியின் 'ஜெயிலர்' படத்தைப் பார்த்திருக்கிறார்.

கால்பந்து சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 'ஜெயிலர்' படத்தைப் பார்க்க தான் மட்டும் செல்லவில்லை. தன் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றிருக்கிறார். 'ஜெயிலர்' படம் பார்க்கச் சென்றபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவரது குடும்பத்தினருடன் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றிற்கு வெளியே நின்று போஸ் கொடுப்பதைக் காணலாம்.

Tap to resize

Latest Videos

undefined

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்தப் படம் தீவிர ரஜினி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நம்ம தலைவர் ரசிகர்தானா என்ற குதுகலத்துடன் படத்தைப் பகிர்ந்துவருகின்றனர்.

நிகழ் இல்லாத நாள்! நிழல்கள் காணாமல் போகும் அரிய வானியல் நிகழ்வு! மிஸ் பண்ணாம பாருங்க!

முன்னதாக, அரசியல் தலைவர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் 'ஜெயிலர்' படப்பிடிப்பை ரசிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

உங்க மொபைலுக்கும் இதே மாதிரி எமர்ஜென்சி அலர்ட் வந்துச்சா? இதுக்கு என்ன அர்த்தம்?

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் வெள்ளித்திரைக்கு திரும்பிய படம் 'ஜெயிலர்'. அவர் இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியனாக அதிரடியான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வெளியானது முதல் ரசிர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

ரஜினியின் கம்பேக் படமான 'ஜெயிலர்' பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. வெளியான ஏழு நாட்களில் ரூ.450 கோடி வசூலித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மாறுபட்ட நடிப்பு பார்வையாளர்களின் பாராட்டுகளைக் குவித்து வருவதால் படத்தின் மீதான ஆர்வம் குறையாமல் இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள கோலிவுட் திரைப்படமான 'ஜெயிலர்' நெல்சன் திலீப்குமார் இயக்குகியுள்ளார். அனிருத் இசையில் உருவான இந்தப் படத்தில் ரஜினிகாந்தைத் தவிர, கேரளாவின் மெகாஸ்டார் மோகன்லால், 'செஞ்சுரி ஸ்டார்' சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் நடித்துள்ளனர். விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், மிர்னா மேனன், யோகி பாபு, தமன்னா பாட்டியா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் கலக்கியுள்ளனர்.

சந்திரயான்-3 vs லூனா-25: நிலவின் தென்துருவத்தில் முதலில் தடம் பதிக்கப்போவது இந்தியாவா? ரஷ்யாவா?

click me!