ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் பிரபாஸின் சலார் படத்துக்கும் இப்படி ஒரு கனெக்‌ஷனா..! நோட் பண்ணுங்கப்பா

By Ganesh A  |  First Published Aug 17, 2023, 4:12 PM IST

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் படத்துக்கும், பிரபாஸ் நடித்துள்ள சலார் படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் கனெக்‌ஷன் உள்ளதை பற்றி பார்க்கலாம்.


ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருவதோடு, உலகளவில் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கும், பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சலார் படத்திற்கும் உள்ள ஸ்பெஷல் கனெக்‌ஷன் ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. அது என்னவென்றால் டைனோசர் தான்.

பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில், காட்டுல சிங்கம், புலி, சிறுத்தையெல்லாம் ஆபத்தானதா இருக்கலாம், ஆனா ஜுராசிக் பார்க்ல அதெல்லாம் டம்மி தான் என்பது போன்ற வசனம் இடம்பெற்று இருக்கும். இதன்மூலம் நடிகர் பிரபாஸை டைனோசரோடு ஒப்பிட்டு கூறி இருப்பார்கள்.

Latest Videos

இதையும் படியுங்கள்... 400 கோடிலாம் இல்ல... ஜெயிலர் படத்தின் 7 நாள் வசூல் இவ்ளோதான் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

அதேபோல் ஜெயிலர் படத்திலும் ரஜினியை டைனோசரோடு ஒப்பிட்டு வசனங்கள் இடம்பெற்று இருக்கும். வில்லன் ஒருவர் ரஜினியின் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வஸந்த் ரவியை பேபி டைனோசர் என கூப்பிடுவார். அதுமட்டுமின்றி இன்று ஜெயிலர் பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதன் கேப்ஷனில், டைனோசர் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிப்பதில் பிசியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

முன்பெல்லாம் படங்களில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற மிருகங்களோடு ஹீரோக்களை ஒப்பிட்டு வந்த நிலையில், தற்போது புது டிரெண்டாக டைனோசரோடு ஒப்பிட தொடங்கி உள்ளனர். ரஜினி ஜெயிலரில் டைனோசராக கலக்கிவிட்டார். இனி பிரபாஸ் சலார் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சலார் திரைப்படம் செப்டம்பர் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

The Dinosaur is currently busy shattering the box office 🦖🔥 in theatres near you! … pic.twitter.com/oTDzS7QyYS

— Sun Pictures (@sunpictures)

இதையும் படியுங்கள்... சன் பிக்சர்ஸ் - ரஜினி கூட்டணியில் அலப்பறையாக வெளிவந்த படங்கள் என்னென்ன? அதன் ரிசல்ட் மற்றும் BoxOffice நிலவரம்

click me!