நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சீனு ஏசியாநெட் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நெல்சன் இயக்கிய இப்படத்தில் சீனு என்பவரும் நடித்துள்ளார். ஆடியோ லாஞ்சில் ரஜினியும், இப்படத்தின் ஒளிப்பதிவாளரும் சீனுவை பற்றி பேசி இருப்பார்கள். சூப்பர்ஸ்டாரே பேசும் அளவுக்கு பேமஸ் ஆன நடிகர் சீனு ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் ஜெயிலர் பட ஷூட்டிங்கின்போது நடந்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதைப்பற்றி பார்க்கலாம்.
அவர் பேசியதாவது : “சூப்பர்ஸ்டார் படத்தில் பணியாற்ற நிறைய நடிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை நான் சரியாக பயன்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சூப்பர்ஸ்டார் ஜெயில் சீனில் எண்ட்ரி கொடுக்கும் போது ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என பாட்டு பாடிக் கொண்டே வருவார். அப்போ என் அருகே வரும்போது, நான், ‘கோட்டை இல்லை கொடியும் இல்லை இப்பவும் நீ ராஜா’ என்ற வரியை பாட வேண்டும்.
இதையும் படியுங்கள்...Jailer: 7 நாட்களில் வசூலில் இமாலய சாதனை படைத்த 'ஜெயிலர்'! 3ஆவது இடத்தை தட்டி தூக்கிய தலைவர்! முழு விவரம் இதோ!
ரஜினி சார் அருகில் வந்ததும் பதற்றத்தில் நான் சரியாக பாடவில்லை. அப்படியே 4 டேக்குகளுக்கு மேல் போனதால் பேக் அப் செய்துவிட்டார்கள். பின்னர் அன்று ரூமுக்கு போன பின் மிகவும் கவலைப்பட்டேன். 14 வருஷமா திரையுலகில் கஷ்டப்பட்டு இப்படி சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பு கிடைச்சும் மிஸ் பண்றோமேனு ரொம்ப வருத்தப்பட்டேன். அப்போது அங்கிருந்த சக நடிகர்கள் தான் எனக்கு ஆறுதல் கொடுத்தனர்.
அந்த சமயத்தில் அசிஸ்டண்ட் டைரக்டர் ஒருவர் என்னுடைய அறைக்கு வந்து, என்னை அழைத்து சென்றார். நான் சரியா நடிக்காததால் திட்டப்போகிறார்களோ என பயந்துகொண்டே சென்றேன். உடனே நெல்சன் சார் என்னை தலைவர் கிட்ட போகச் சொன்னார். எனக்கு பயங்கர குஷி ஆகிவிட்டது. தலைவரும் என்னை வாங்க... வாங்க என அழைத்து நலம் விசாரித்தார். பயப்படக் கூடாது, தைரியமா இருக்கனும், நீங்க நல்லா நடிப்பிங்க, நல்லா வருவீங்கனு சொன்னாரு. அவரின் அந்த வார்த்தைகளை கேட்டதும் என் மனதில் இருந்த கஷ்டங்கள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டது.
பின்னர் மறுநாள் அந்த காட்சி படமாக்கினார்கள். அப்போதும் சூப்பர்ஸ்டார் என்னிடம் அன்பாக பேசினார். பின்னர் அந்த காட்சி முடிந்ததும் அவர் என் தோளில் கைபோட்டார். அதை சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அந்த தருணத்தால் அன்று முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. இந்த சந்தோஷத்தை என் குடும்பத்தினரிடமும் பகிர்ந்துகொண்டேன். தியேட்டரில் அந்த காட்சியை பிஜிஎம்மோடு பார்க்கும் போது அனல் பறந்தது என சீனு தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் சீனுவின் முழு பேட்டியை இந்த யூடியூப் வீடியோவில் பார்க்கலாம்