ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு நிறைவேறியது.. மீண்டும் இணையும் அண்ணன் தம்பி.. தனி ஒருவன் 2 லோடிங்!

By Ansgar R  |  First Published Aug 17, 2023, 8:06 AM IST

ஜெயம் திரைப்படம் துவங்கி பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை தனது திரைப்பட வாழ்க்கையை  படிப்படியாக மெருகேற்றி வளர்ந்தவர் நடிகர் ஜெயம் ரவி என்றால் அது மிகையல்ல. அதேபோல அவருடைய அண்ணனும், இயக்குனருமான மோகன்ராஜ் அவர்களும் ஒரு சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருகிறார்.


இந்நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில், அவருடைய தம்பி ஜெயம் ரவி மித்ரன் ஐபிஎஸ் என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்து மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் தான் தனி ஒருவன். இந்த திரைப்படம் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி 2018ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த படத்தின் எட்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதை உறுதி செய்துள்ளனர் நடிகர் ஜெயம் ரவியும் அவருடைய அண்ணனுமான இயக்குனர் மோகன் ராஜா அவர்களும். 

Tap to resize

Latest Videos

மறைக்கப்பட்ட மருத்துவ இனம் குறித்து பேசும் படத்தை தயாரிக்கும் 'அட்டு' பட இயக்குநர் ரத்தன் லிங்கா!

இது குறித்து அவர்கள் வெளியிட்ட காணொளியில் ரசிகர்கள் தனி ஒருவன் திரைப்படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி என்றும் அதற்கு மீண்டும் உண்மை உள்ளவர்களாக நடந்து கொள்ளும்படி அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தற்போது தயாராகி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக எப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஒரு திரைப்படம் தனி ஒருவன் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் நடித்த அரவிந்த்சாமி அவர்களுடைய நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. 

Official Announcement of is Expected on 28/08/2023 ✨

Mithran I.P.S is Back 😀🎉pic.twitter.com/V7ew3rgDrx

— Mithran R (@r_mithran)

குறிப்பாக இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை மிகுந்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, நாசர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள தகவல் வெளியானது ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கண்டுகொள்ளாத கமல்..? கைகொடுத்து மகிழ்ந்த ரஜினி.. இதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்! - கொண்டாடும் ரசிகர்கள்!

click me!