பேம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத்இணைந்து தயாரிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது.
'அட்டு' திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜகுமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த இரண்டாவது படத்தை, இயக்குநர் மன்னவராஜன் இயக்குகிறார். இப்படத்தில் லெனின் பாலாஜி ஒளிப்பதிவாளராகவும், நாகராஜன் படத்தொகுப்பாளராகவும், பணியாற்ற உள்ளனர். அரஜுன் என்கிற புதுமுக நடிகர் ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக செம்பி படத்தில் நடித்த முல்லை நடிக்கிறார்.
சல்வார் அழகில் கச்சிதமாக அழகை வெளிப்படுத்திய அனிகா சுரேந்தரன்! சுத்தி போட சொல்லும் நெட்டிசன்கள்!
ரத்தன் லிங்கா ஓர் இயக்குநராக இருந்தாலும் நல்ல கதை சொல்லும் இயக்குநருக்கு வாய்ப்பு தரும் வகையில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் மன்னவராஜன் இயக்கும் இத்திரைப்படம் நம் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு மருத்துவ இனத்தை பற்றிப் பேசுகிறது. ரசிகர்கள் பாராட்டுகளுடன் தேசிய விருதுகளையும் குறி வைத்து இப்படம் உருவாகிறது.
இயக்குநர், தயாரிப்பாளர் ரத்தன் லிங்கா மற்றும் Almuriat ராஜகுமார் வேலுசாமி ஆகியோரின் தயாரிப்பில் ஏற்கெனவே உருவான "லாக்'' திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.