'தேவரா' படத்தில் இருந்து சைஃப் அலிகானின் 'பைரா' கதாபாத்திரத்தை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர் !

By manimegalai a  |  First Published Aug 16, 2023, 5:23 PM IST

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் பிறந்தநாளை முன்னிட்டு, தற்போது இவர் நடித்து வரும் 'தேவாரா' படத்தில் இருந்து இவரின் முதல் தோற்றத்தை, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வெளியிட்டுள்ளார்.
 


2024 ஆம் ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்றான 'தேவாரா'வில் கதாநாயகனாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரக்கூடிய இப்படத்தில் சைஃப் அலிகான் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் பிறந்தநாளை, முன்னிட்டு இப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர்...  சைஃப் அலிகானின் கதாபாத்திரமான 'பைரா'வின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

நடிகை கல்யாணிக்கு இந்த நிலையா? வேறொருவரின் முதுகெலும்பை வைத்து அறுவை சிகிச்சை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த அதிகாரப்பூர்வ போஸ்டரில், சைஃப் அமைதியான நீர் மற்றும் மலைகளின் பின்னணியில் நிற்பதை பார்க்க முடிகிறது.  சைஃப் அலிகானின் தோற்றத்தைப் பகிர்ந்து, ஜூனியர் என்டிஆர் தெரிவித்திருப்பதாவது, ‘’பைரா’ பிறந்தநாள் வாழ்த்துக்கள் சைஃப் சார்!’ என்று கூறியுள்ளார்.

கயல் சீரியலில் நடந்த செம்ம ட்விஸ்ட்! பிரச்சனைக்கு நடுவே ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா.?

நந்தமுரி கல்யாண ராம் வழங்க, யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், கொரட்டாலா சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். ‘தேவரா’ திரைப்படம் 5 ஏப்ரல் 2024 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் கலைத் தலைவராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் பணியாற்றுகிறார். இந்த படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

BHAIRA

Happy Birthday Saif sir ! pic.twitter.com/DovAh2Y781

— Jr NTR (@tarak9999)

 

click me!