ராமநாதசுவாமி திருக்கோவிலில் இசைஞானியை காண திரண்ட ரசிகர்களால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 16, 2023, 3:23 PM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமமேஸ்வரம் ராமநாதர் சுவாமி கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்ற முக்கிய திருக்கோயில்களில் ஒன்று. ராமேஸ்வரத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இதனிடையே ஆடி அமாவாசை நேற்று மாலை தொடங்கி இன்று மாலை வரை இருப்பதால் ஆடி அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே, நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் இசைஞானி இளையராஜா ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருக்கு ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் சாமி தரிசனம் செய்வதற்கான முழு ஏற்படும் செய்யப்பட்டிருந்தது. இளையராஜா ராமநாதசாமி தரிசித்து விட்டு பின்னர் அம்பாள் சன்னதியில் மனமுருகி வேண்டினார். பின்னர் ஆஞ்சநேயரை கும்பிட்டு விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இளையராஜாவுடன் செல்பி எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் அதில் விருப்பம் இல்லாமல் கடந்து சென்றார்.

click me!