சுதந்திர தினம்.. சைலெண்டாக அப்டேட் கொடுத்த இயக்குனர் சங்கர் - வந்துவிட்டார் இந்தியன் தாத்தா!

By Ansgar R  |  First Published Aug 15, 2023, 8:53 PM IST

பிரபல இயக்குனர் சங்கர் அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட பிறகு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது இந்தியன் 2 திரைப்படத்திற்காக பணியாற்றி வருகிறார்.


கடந்த 1996ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான திரைப்படம் தான் இந்தியன். இந்நிலையில் சுமார் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. 

தொடக்கம் முதலிலேயே இந்த படத்திற்கு பல தடைகள் ஏற்பட்ட நிலையில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த இந்தியன் 2 படத்தின் படபிடிப்பின் போது, கிரேன் ஒன்று விழுந்து சிலர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

பழனியில் சுவாமி தரிசனம்.. வெள்ளி கடை முன்பு கூடிய ரசிகர் கூட்டம் - வைரலாகும் யோகி பாபுவின் வீடியோ!

அதனை தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வந்த இந்த திரைப்படத்திற்கு, பெரும் இடியாக அமைந்தது இந்த படத்தில் நடித்து வந்த பிரபல நடிகர் திரு. விவேக் அவர்களுடைய மரணம். அடுத்தடுத்து பல தடைகளை சந்தித்து வந்த இந்த திரைப்படம், தற்பொழுது முழு வீச்சில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் முடிந்துள்ள நிலையில், VFX அமைக்கும் பணிகளுக்காக அவ்வப்போது வெளிநாடு சென்று திரும்புகிறார் இந்த படத்தின் இயக்குனர் சங்கர். 

pic.twitter.com/rhStm6ISLD

— Shankar Shanmugham (@shankarshanmugh)

சுமார் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசனுடன் சங்கர் இணைந்துள்ள இந்த திரைப்படத்தை இயக்கி வரும் அதே நேரத்தில், ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தையும் அவர் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே உலகநாயகன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், எதிர்வரும் 2024ம் ஆண்டு வெளியாகியுள்ள இந்தியன் 2 படம் குறித்த ஒரு தகவலை தற்பொழுது தனது X (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சங்கர். இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்துள்ள கமல்ஹாசனின் புகைப்படத்தை தற்பொழுது வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் வாழ்த்தியுள்ளார் அவர். 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்! யார் தெரியுமா?

click me!