நடிப்பில் இருந்தே விலக நினைத்த ரஜினி.. கம்பேக் கொடுக்க வைத்த கேங்ஸ்டர் படங்கள்.. எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட்!

Published : Aug 16, 2023, 03:58 PM ISTUpdated : Aug 17, 2023, 11:02 AM IST
நடிப்பில் இருந்தே விலக நினைத்த ரஜினி.. கம்பேக் கொடுக்க வைத்த கேங்ஸ்டர் படங்கள்.. எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட்!

சுருக்கம்

ரஜினிகாந்த் கேங்ஸ்டராக நடித்த பிரபலமான படங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் ரஜினியின் திரைவாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய படங்களில் கேங்கஸ்டர் கதைகளின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் ரஜினிகாந்த் கேங்ஸ்டராக நடித்த பிரபலமான படங்கள் குறித்து பார்க்கலாம்.

பில்லா : ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பில்லா. ஹிந்தியில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘டான்’ படத்தின் ரீமேக் தான் ‘பில்லா’ அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. பில்லா என்ற ரோலில் நடித்த ரஜினிகாந்த் ஒரு கேங்ஸ்டராக நடித்திருப்பார். 1980-ம் ஆண்டு ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய ‘பில்லா’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது. இன்னும் சொல்லப்போனால், நடிப்பை விட்டு விலக நினைத்த ரஜினிகாந்துக்கு இப்படம் கம்பேக் ஆக அமைந்தது. இந்த படம் ஏற்படுத்திய தாக்கத்தால், 2007 ஆம் ஆண்டில், பில்லா ரீமேக்கில்அஜித் நடித்திருந்தார். பில்லாவின் ரீமேக்கான இந்த படமும் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது.

தீ (1981) : ரஜினிகாந்த் அண்டர் வேர்ல்டு உலகத்தின் ராஜாவாக ரஜினி நடித்த படம் தான் தீ. பில்லாவின் நீட்சியாகவே ரசிகர்கள் தீ படத்தை பார்த்தனர். எனினும் தீ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தீ, பில்லா போன்ற படங்கள் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோவாக மாற உதவியது.

நல்லவனுக்கு நல்லவன் : இன்றுவரை ரஜினிகாந்தின் சிற்ப்பான நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று நல்லவனுக்கு நல்லவன்.கிருஷ்ணம் ராஜு மற்றும் ஜெயசுதா நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இந்த படம். ரஜினியை வைத்து அதிக படங்களை இயக்கிய எஸ்.பி முத்துராமன் இப்படத்தை இயக்கி இருந்தார். குடும்ப உறவுகளின் மதிப்பையும் இந்த படம் பேசியதால் பொதுவான பார்வையாளர்களுக்கும் இப்படம் பிடித்தது. 1982 இல் வெளியான ‘நல்லவனுக்கு நல்லவன்’ பிளாக்பஸ்டர்  ஹிட்டானது. 152 நாட்கள் ஓடியது. ரஜினிகாந்த் தனது முதல் பிலிம்பேர் விருதை நல்லவனுக்கு நல்லவன் படத்திற்காக வென்றார்.

ரங்கா : தியாகராஜன் இயக்கிய ரங்கா படத்தில் ரஜினிகாந்த் கேங்ஸ்டராக டைட்டில் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியின் அக்காவாக கே.ஆர். விஜயா நடித்திருப்பார். முதலில் நடிகை ஜெயலலிதா ரஜினியின் அக்காவாக நடிப்பதாக கூறப்பட்டது. இருப்பினும், கே.ஆர்.விஜயாவுக்கு அந்த வாய்ப்பு சென்றது. ரங்கா படம் வெளியானதும், “அவசர அடி ரங்கா” டயலாக் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதே போல் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் ‘பட்டுக்கோட்டை அம்மாளு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. ரஜினியின் மற்ற படங்களைப் போலவே ‘ரங்கா’ படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.

தளபதி (1992) நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய 2-வது கேங்ஸ்டர் படம் தளபதி. மகாபாரத்தில் வரும் துரியோதணன் - கர்ணம் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கி இருப்பார் மணிரத்னம். சூர்யா - தேவா ஆகியோருக்கு இடையேயான நட்பை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் ரஜினி கேங்க்ஸ்டராக மிரட்டி இருப்பார். எனவே தளபதி தமிழ் திரைப்பட பார்வையாளர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தது. பில்லா மற்றும் தீ போலல்லாமல், தளபதி படத்தில் ரஜினிகாந்த் ஒரு நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ரஜினியின்திரை வாழ்க்கையில் சிறந்த  படங்களில் ஒன்றாக தளபதி கருதப்படுகிறது. இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பாட்ஷா : தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எடுக்கப்பட்ட சிறந்த கமர்ஷியல் படங்களில் ஒன்று என்றால் அது நிச்சயம் பாட்ஷா தான். உங்களுக்கு பிடித்த ரஜினி படங்களை சொல்லுங்கள் என்றால் அந்த பட்டியலில் நிச்சயம் பாட்ஷா படம் இருக்கும். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான பாட்ஷா படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன்பிறகு வெளியான பல படங்களில் பாட்ஷா படத்தின் சாயலை பார்க்க முடியும். கதை மற்றும் நடிப்பு தவிர, தேவாவின் பின்னணி . பின்னணி இசையையும் ரசிகர்கள் கொண்டாடினர். ஆம், பஞ்ச் டயலாக், பாடல்கள் என பாட்ஷா படத்தை அணு அணுவாக ரசித்தனர் ரசிகர்கள். “ நா ஒரு தடவ சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி” என்ற வசனத்தை சொல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. 1995 இல் வெளியான போது அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக பாட்ஷா மாறியது.

பாக்ஸ் ஆபீஸ் கிங்.. நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும் அசால்டா 100 கோடி வசூல் செய்த ரஜினி படங்கள்!

கபாலி : ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் 2016 இல் ‘கபாலி’ படத்தின் மூலம் இயக்குநர் பா ரஞ்சித்துடன் ரஜினிகாந்தின் முதல் கூட்டணியைக் குறித்த படம் என்பதால் பார்வையாளர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.  கபாலி வேடத்தில், வயதான கேங்ஸ்டர் தனது கடந்த காலத்துடன் மெதுவாக வந்து தனது குடும்பத்துடன் மீண்டும் இணைய முயற்சிக்கும் கதையை படம் கண்காணித்தது. ‘கபாலி’ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

அதிக எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், கபாலி படம் பெரும்பாலும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், ‘கபாலி’ பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றது, இதன் மூலம் பா.ரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து காலா என்ற மற்றொரு படத்தையுm இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?