'லியோ' படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் சஞ்சய் தத் படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 படத்தில் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த தென்னிந்திய திரைப்படங்களும் இவருக்கு வரிசை கட்டி நிற்கின்றன. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படத்திலும் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
மேலும் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'லியோ' படத்தில் அவர் நடித்துள்ள ஆண்டனி தாஸ் என்கிற கதாபாத்திரத்தின் கிலிம்ஸி வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதில் மிகவும் ஸ்டைலிஷ் ஆன, மற்றும் கொஞ்சம் முரட்டு தனமான வில்லனாக ஒரு கழுகு சிலை முன் சஞ்சய் தத் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை பிரமிக்க வைத்தார். மேலும் இந்த திரைப்படத்திலும் கே ஜி எஃப் 2 படத்தின் கதாபாத்திரம் போல் சஞ்சய் தத் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
'லியோ' படத்தை தொடர்ந்து, தற்போது சஞ்சய் தத் தெலுங்கில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் 'டபுள் ஸ்மார்ட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சண்டைக் காட்சியில் படப்பிடிப்பு எடுக்கப்பட்ட போது வால் ஒன்று சஞ்சய்தத்தின் தலையில் பலமாக படவே, அவருக்கு தலையில் பலத்த காயங்கி ஏற்பட்டு ரத்தம் கொட்டியதாகவும், பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு... அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத்துக்கு விபத்தில் படபிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாக ரசிகர்கள் பலர் அக்கறையோடு அவரை நலம் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.