சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அவருடைய நேர்த்தியான நடிப்பு மட்டுமல்ல, அவர் சிறந்த குணமும் தான் என்பதை நிரூபிக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு (ஏப்ரல் 8 2018) முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சங்கம் நடத்திய ஒரு போராட்டம் குறித்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ் பட நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர். அந்த வகையில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அங்கு வந்தார், அப்பொழுது அங்கு சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் மூத்த நடிகர் நடிகைகளை வரவேற்று நின்றிருந்தனர்.
ஆனால் அந்த போராட்டத்திற்கு பங்கேற்க வந்த நடிகர் கமல், விஜய் சேதுபதியை கண்டுகொள்ளாமல் அருகில் இருந்த சூர்யாவிடம் மட்டும் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். ஆனால் அவரை தொடர்ந்து அங்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், விஜய் சேதுபதி கண்ட சந்தோஷத்தில், அவருக்கு கைகொடுத்துவிட்டு, அருகில் இருந்த மூத்த நடிகர் ஆனந்தராஜ் அவர்களையும் பார்த்து நலம்விசாரித்துவிட்டு, சூர்யாவிடமும் பேசிவிட்டு உள்ளே சென்றார்.
'லியோ' பட நடிகர் சஞ்சய் தத்துக்கு படப்பிடிப்பில் விபத்து! வெளியான பரபரப்பு தகவல்!
கமல்ஹாசன் கை கொடுக்காமல் சென்றபொழுது வாடி இருந்த விஜய் சேதுபதியின் முகம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கைகொடுத்ததும் தெளிவு பெற்றதை நம்மால் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அப்போது பேட்ட திரைப்படம் உருவாக துவங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் அவர் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார் என்று இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்த தற்போது இமயமலையில் ஓய்வெடுக்க சென்றுள்ளார். இந்த ஓய்வு காலம் முடிந்த பிறகு முதலில் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் அவருடைய 170வது படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் அவரது 171வது படத்தில் நடிகதுவங்குவர்.
ஞானவேல் இயக்கும் படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காவல்துறை அதிகாரியின் வேடத்தை ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சல்வார் அழகில் கச்சிதமாக அழகை வெளிப்படுத்திய அனிகா சுரேந்தரன்! சுத்தி போட சொல்லும் நெட்டிசன்கள்!