ஒரே நாளில் 10 மில்லியன்! யூடியூப் சேனலில் புதிய சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

By SG Balan  |  First Published Aug 23, 2024, 12:28 AM IST

ரொனால்டோவின் சேனல் 90 நிமிடங்களுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைப் பெற்றது. இந்த மைல்கல்லை மிக விரைவாக எட்டியவர் ரொனால்டோ தான். ஆறு மணிநேரத்திற்குள், இந்த எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டியது. மேலும் நாளின் முடிவில், அது 10 மில்லியனையும் தாண்டியது.


கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனது உலகளாவிய செல்வாக்கை நிரூபித்துள்ளார். 39 வயதான போர்ச்சுகீசிய ஜாம்பவான் யூடியூப் சேனல் மூலம் டிஜிட்டல் உலகில் நுழைந்த ஒரே நாளில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று அதிவேகமாக வளர்ந்த யூடியூப் சேனலுக்கான சாதனையை முறியடித்துள்ளார்.

ரொனால்டோ தனது யூடியூப் சேனலான யுஆர் கிறிஸ்டியானோவை ஆகஸ்ட் 21ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் உடனே அவரது சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

அவரது நண்பரான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் வேடிக்கையான வினாடி வினா விளையாட்டு, மேடம் டுசாட்ஸில் ரொனால்டோ தனது மெழுகு உருவத்தை சந்தித்தது போன்ற பல வீடியோக்களை சேனலில் வெளியிட்டுள்ளார்.

ரொனால்டோவின் சேனல் 90 நிமிடங்களுக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களைப் பெற்றது. இந்த மைல்கல்லை மிக விரைவாக எட்டியவர் ரொனால்டோ தான். ஆறு மணிநேரத்திற்குள், இந்த எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டியது. மேலும் நாளின் முடிவில், அது 10 மில்லியனையும் தாண்டியது.

தினமும் 1,600 கி.மீ. பயணம் செய்து ஆபீசுக்குப் போகும் ஸ்டார்பக்ஸ் சிஇஓ பிரையன் நிகோல்!

இதற்கு முன் ஹாம்ஸ்டர் கோம்பட் (Hamster Kombat) ஏழு நாட்களில் 10 மில்லியன் மைல்கல்லை எட்டியதுதான் முந்தைய சாதனையாக இருந்தது. இப்போது ரொனால்டோவின் சேனல் அந்த சாதனையை முறியடித்துள்ளது. ரொனால்டோவின் சேனல், தற்போது கிட்டத்தட்ட 12 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

இந்நிலையில், கால்பந்து ஜாம்பவான் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அதில், "SIUUUscribers" என்று விளையாட்டுத்தனமாக குறிப்பிட்டு நன்றி கூறியிருக்கிறார்.

"எனது குடும்பத்திற்கு ஒரு பரிசு … அனைத்து சப்ஸ்கிரைபர்களுக்கும் நன்றி!" என ரொனால்டோ தனது தெரிவித்துள்ளார். தன் சேனலுக்குக் கிடைத்த கோல்டு ப்ளே பட்டனை தனது குழந்தைகளுக்கு காண்பிக்கும் காட்சியையும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ரொனால்டோ சமூக ஊடக தளங்களில் தனது சேனலை அறிமுகப்படுத்தி இருந்தார். எக்ஸில் 112.5 மில்லியன் பேரும் பேஸ்புக்கில் 170 மில்லியன் பேரும் இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் பேரும் ரொனால்டோவை பின்தொடர்கிறார்கள்.

"காத்திருப்பு முடிந்தது. இறுதியாக, எனது யூடியூப் சேனல் வந்துவிட்டது. இந்தப் புதிய பயணத்தில் என்னுடன் இணைந்திருங்கள்" என்று சேனல் அறிமுகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ரொனால்டோ தற்போது சவூதி அரேபிய கிளப் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். பலோன் டி'ஓரை ஐந்து முறை வென்ற ரொனால்டோ, இப்போது யூடியூப் சேனலில் சாதனையுடன் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

ஐபோன் 15 வாங்க ஆசையா? பிளிப்கார்ட்டில் மெகா டிஸ்கவுண்ட்! உடனே ஆர்டர் பண்ணுங்க!!

click me!