ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் துனிசியாவிடம் ஃபிரான்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. டென்மார்க்கை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 2 போட்டிகளில் ஜெயித்து ஏற்கனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்ட நடப்பு சாம்பியன் ஃபிரான்ஸ் அணி துனிசியாவை எதிர்கொண்டது.
இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2வது பாதியில் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் துனிசியா வீரர் வாஹ்பி கஜ்ரி கோல் அடித்தார். அதன்பின்னர் ஃபிரான்ஸ் அணி எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. கடைசியில் துனிசியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
undefined
FIFA World Cup 2022: கொண்டாடிய ரொனால்டோ.. ஃபெர்னாண்டஸுக்கு கொடுக்கப்பட்ட கோல்.! நடந்தது என்ன..?
அதே க்ரூப் டி-யில் ஆஸ்திரேலியாவும் டென்மார்க்கும் மோதிய மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், இந்த க்ரூப்பிலிருந்து ஃபிரான்ஸும் ஆஸ்திரேலியாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன. இன்றைய போட்டியில் ஃபிரான்ஸை வீழ்த்தியும் துனிசியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.