ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் கத்தாரை வீழ்த்திய நெதர்லாந்து மற்றும் ஈகுவடாரை வீழ்த்திய செனகல் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று க்ரூப் ஏ-வில் இடம்பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
செனகல் - ஈகுவடார் இடையேயான போட்டியில் ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி செனகல் வீரர் சர் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 2ம் பாதியில் 68வது நிமிடத்தில் ஈகுவடார் வீரர் மோய்ஸஸ் கால்செடோ கோல் அடிக்க, 70வது நிமிடத்தில் கௌலிபெலி செனகல் அணிக்கு 2வது கோல் அடித்து கொடுத்தார். 2-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது.
undefined
FIFA World Cup 2022: கொண்டாடிய ரொனால்டோ.. ஃபெர்னாண்டஸுக்கு கொடுக்கப்பட்ட கோல்.! நடந்தது என்ன..?
மற்றொரு போட்டியில் நெதர்லாந்து மற்றும் கத்தார் அணிகள் மோதின. இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 2 கோல்களை அடிக்க, கத்தார் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்று வெற்றி பெற்ற நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகள் தலா 2 வெற்றிகளுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன. கத்தார் மற்றும் ஈகுவடார் அணிகள் தொடரை விட்டு வெளியேறின.