FIFA World Cup 2022: கொண்டாடிய ரொனால்டோ.. ஃபெர்னாண்டஸுக்கு கொடுக்கப்பட்ட கோல்.! நடந்தது என்ன..?

Published : Nov 29, 2022, 08:25 PM IST
FIFA World Cup 2022: கொண்டாடிய ரொனால்டோ.. ஃபெர்னாண்டஸுக்கு கொடுக்கப்பட்ட கோல்.! நடந்தது என்ன..?

சுருக்கம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் உருகுவேவுக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ அடித்ததாக நினைக்கப்பட்ட கோல், ப்ரூனோ ஃபெர்னாண்டஸ் அடித்ததாக கொடுக்கப்பட்டது. நடந்தது என்னவென்று பார்ப்போம்.  

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பிரேசில் மற்றும் ஃபிரான்ஸ்  அணிகள் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், 3வது அணியாக போர்ச்சுகலும் முன்னேறியது. 

இந்த உலக கோப்பை கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு கடைசி உலக கோப்பை என்பதால் போர்ச்சுகல் அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு ஏற்றவகையில், முதல் போட்டியில் கானாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது போர்ச்சுகல் அணி. அந்த போட்டியில் கோல் அடித்த ரொனால்டோ, 5 உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் கால்பந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

FIFA World Cup 2022: என் கண்ணுல படக்கூடாதுனு “சாமி”கிட்ட வேண்டிக்க..! மெஸ்ஸிக்கு மெக்ஸிகோ பாக்ஸர் மிரட்டல்

இந்நிலையில், உருகுவேவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2 கோல்களுமே போர்ச்சுகல் வீரர் ப்ரூனோ ஃபெர்னாண்டஸ் தான் அடித்தார். 54வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட முதல் கோல் ரொனால்டோ அடித்தாரா அல்லது ஃபெர்னாண்டஸ் அடித்தாரா என்ற குழப்பம் எழுந்தது. 

விளையாட்டு வீரர்களுக்கு வயது வெறும் எண்களாகிவிட்டது..! முன்மாதிரி ரொனால்டோ.. எப்படி சாத்தியமானது..?

ஃபெர்னாண்டஸ் அடித்த பந்தை ரொனால்டோ தலையால் முட்டி கோல் அடித்தது போல இருந்தது. ரொனால்டோவும் அவர் கோல் அடித்ததை போல் தான் கொண்டாடினார். ஆனால் அந்த கோல் ப்ருனோ ஃபெர்னாண்டஸ் அடித்ததுதான். ஃபெர்னாண்டஸ் அடித்த பந்துதான் நேரடியாக கோலுக்கு சென்றுள்ளது. ரொனால்டோ அந்த தனது தலையால் அந்த பந்தை முட்டி கோல் அடிக்க முயன்றார். ஆனால் பந்து ரொனால்டோ தலையில் படாமலேயே கோலுக்கு சென்றது. அதனால் அது ஃபெர்னாண்டஸ் அடித்த கோல் தான்.
 

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup: தோல்வியின் விரக்தியா? மைதானத்தில் வரம்பு மீறிய அர்ஜென்டினா வீரர்கள்! இறுதி விசிலுக்குப் பின் மைதானத்தில் நடந்தது என்ன?
Lionel Messi Net Worth: 6 சொகுசு ஹோட்டல்கள், ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு.. பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் மெஸ்ஸி!