ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் அர்ஜெண்டினாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நிலையில், அந்த அணியில் இடம்பெற்ற ஒவ்வொரு வீரருக்கு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பரிசாக வழங்குவதாக சவுதி அரேபியா மன்னர் அறிவித்துள்ளார்.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவிற்கு இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் மீதும் அவர்களது அணிகளான அர்ஜெண்டினா மற்றும் போர்ச்சுகல் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் வலுவான அர்ஜெண்டினா அணி, முதல்போட்டியில் சிறிய அணியான சவுதி அரேபியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி சார்பில் பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி மட்டுமே ஒரு கோல் அடித்தார். ஆனால் சவுதி அணி 2 கோல் அடித்து வெற்றி பெற்றது.
undefined
சவுதி அணி அர்ஜெண்டினாவை வீழ்த்தும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அபாரமாக ஆடிய சவுதி அணி அர்ஜெண்டினாவிற்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்தது. சிறிய அணியான சவுதி அணிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும். அந்த வெற்றியை சவுதி அரேபியா நாடே வெகுவாக கொண்டாடிவருகிறது. இந்த வெற்றியை கொண்டாடுவதற்காக ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவுதி அணி வரலாற்று வெற்றி பெற்றதையடுத்து, இந்த பெருமையை பெற்றுத்தந்த சவுதி கால்பந்து அணி வீரர் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டோம் சொகுசு கார் பரிசளிப்பதாக சவுதி மன்னர் முகமது பின் சலாம் அல் சௌத் அறிவித்துள்ளார்.
FIFA World Cup 2022: கடைசி நேரத்தில் 2 கோல்கள் அடித்து வேல்ஸ் அணியை வீழ்த்தி ஈரான் அபார வெற்றி
இந்திய மதிப்பில் அந்த காரின் விலை ரூ.8.99 கோடி முதல் ரூ.10.48 கோடி ஆகும். மிகப்பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமே வாங்க வல்ல சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் காரை தங்கள் நாட்டு கால்பந்து வீரர்களுக்கு பரிசளிப்பதாக சவுதி மன்னர் அறிவித்திருக்கிறார். சிறிய கால்பந்து அணியான சவுதி வீரர்கள் இந்த காரை சம்பாதித்து வாங்குவதெல்லாம் கடினமான காரியம். அர்ஜெண்டினாவை வீழ்த்தியதன் விளைவாக அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.