இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதித்த தடையை நீக்கியது ஃபிஃபா! U17 மகளிர் உலக கோப்பையை இந்தியாவில் நடத்தலாம்

By karthikeyan VFirst Published Aug 27, 2022, 9:39 AM IST
Highlights

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்தது ஃபிஃபா.
 

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாவது தரப்பினரின் தலையீடு இருப்பதாக கூறி இடைக்கால தடை விதித்தது  சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா. 

85 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு முதல் முறையாக ஃபிஃபா தடை விதித்தது. 

இதையும் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்

இந்த இடைக்கால தடையால் தடையால் அக்டோபர் 11 முதல் 30 வரை இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலக கோப்பையை நடத்துவது சந்தேகமானது. 

இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதித்த இடைக்கால தடையை நீக்கியிருக்கிறது ஃபிஃபா. எனவே அக்டோபர் 11 முதல் 30 வரை இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த மகளிர் கால்பந்து உலக கோப்பை திட்டமிட்டபடி இந்தியாவிலேயே நடத்தப்படும் என ஃபிஃபா தெரிவித்துவிட்டது.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்

முன்னதாக, பதவிக்காலம் முடிந்தும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக நீடித்துவந்த பிரஃபுல் படேலை அப்பதவியிலிருந்து நீக்கிய உச்சநீதிமன்றம், 3 நபர் நிர்வாகிகள் குழுவை அமைத்தது. 

அந்த 3 நபர் நிர்வாகிகள் குழுவைத்தான், 3ம் தரப்பினரின் தலையீடு என்று கூறி ஃபிஃபா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்போது இடைக்கால தடையை நீக்கியது ஃபிஃபா.
 -

click me!