அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் ரத்து..! ஃபிஃபா அதிரடி முடிவு?

By karthikeyan V  |  First Published Aug 26, 2022, 9:43 PM IST

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை விரைவில் ஃபிஃபா ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டிய சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

85 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு முதல் முறையாக ஃபிஃபா தடை விதித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்

இந்த இடைக்கால தடையால் தடையால் அக்டோபர் 11 முதல் 30 வரை இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலக கோப்பையை நடத்துவது சந்தேகமாகியுள்ளது. 

இதுதொடர்பாக ஃபிஃபா வெளியிட்ட அறிக்கையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் நபர்கள் தலையீடும் ஆதிக்கமும் அதிகம் இருக்கிறது. இது பிபா விதிகளை அப்பட்டமாக மீறியதாகும். ஆதலால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குஇடைக்காலத் தடைவிதிக்க ஒருமனதாக பிபா கவுன்சில் முடிவு செய்துள்ளது.  

இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு அதிகாரம் முழுமையாக கிடைத்தால், அதன் உறுப்பினர்கள் புதிதாக மாற்றப்படும்போது, இந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்படும். இந்த தடை உத்தரவால், 2022,ம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 30ம் தேதிவரை 17வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் திட்டமிட்டபடி நடத்த முடியாது. அடுத்த நடவடிக்கைகளை பிபா அமைப்பு ஆலோசித்து வருகிறது, தேவைப்படும்பட்சத்தில் கவுன்சிலிடம் இது குறித்து ஆலோசிப்போம்” என்று தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க - Asia Cup: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்.! ஆசை காட்டி மோசம் செய்யப்பட்ட சீனியர் வீரர்

இந்நிலையில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்ய ஃபிஃபா பரிசீலித்துவருவதாகவும், விரைவில் அந்த தடை செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!