ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பே தொடக்கம்..! இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Aug 12, 2022, 9:54 AM IST
Highlights

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை வரும் நவம்பர் 21ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இப்போது ஒருநாள் முன்கூட்டியே நவம்பர் 20ம் தேதியே தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஃபிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா.

கிரிக்கெட் உலக கோப்பையை விட சர்வதேச அளவில் பெரும்பாலானோரால் பார்க்கப்படுவது கால்பந்து உலக கோப்பை. 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை கத்தாரில் நடக்கிறது. வரும் நவம்பர் 11ம் தேதி தொடங்கி டிசம்பர் 18ம் தேதி வரை நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க - இவரை ஏன்யா இன்னும் புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்திய அணியில் சீனியர் வீரரின் தேர்வை விமர்சித்த கிரன் மோர்

32 நாடுகள் 8 பிரிவுகளில் இடம்பெற்று ஆடுகின்றன. லீக் சுற்றில் தினமும் 4 ஆட்டங்கள் ஆட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்கள் தயார்படுத்தப்படுகின்றன.

நவம்பர் 21ம் தேதி தொடங்குவதாக இருந்த கால்பந்து உலக கோப்பை தொடர், நவம்பர் 20ம் தேதியே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை நடத்தும் கத்தார் நாட்டு அணி முதல் போட்டியை ஆடும் விதமாக ஒருநாள் முன்கூட்டியே தொடங்கப்படுகிறது. 

ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 21ம் தேதி முதல் லீக் போட்டியில் நெதர்லாந்து - செனெகல் அணி மோதுவதாக இருந்தது. ஆனால் இப்போது 20ம் தேதியே ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடக்க விழாவை நடத்திவிட்டு, அன்றைய தினம் நடக்கும் முதல் போட்டியில் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - உன் கவலை எங்களுக்கு புரியுது.. அதுக்கு நாங்க என்ன பண்றது..? ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு கவாஸ்கர் பதிலடி

குரூப் ஏ - கத்தார், ஈகுவடார், செனெகல், நெதர்லாந்து

குரூப் பி - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குரூப் சி - அர்ஜெண்டினா, சௌதி அரேபியா, போலந்து, மெக்ஸிகோ

குரூப் டி - ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

குரூப் இ - ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்

குரூப் எஃப் - கனடா, பெல்ஜியம், மொராக்கோ, குரோஷியா

குரூப் ஜி - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன்

குரூப் ஹெச் - போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா

click me!